வெள்ளி, மார்ச் 14 || முறைகேடாக நடத்தப்படுபவர்கள் பாக்கியவான்கள்
- Honey Drops for Every Soul

- Mar 14, 2025
- 1 min read
வாசிக்க: சங்கீதம் 73 : 1-14, 22-26
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் ... ஜீவகிரீடத்தைப் பெறுவான். - யாக்கோபு 1:12
விசுவாசிகளுக்கு அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் நியாயமற்றதாகத் தோன்றலாம். கர்த்தரை கனம் பண்ண அவர்கள் உண்மையாக முயற்சிக்கிறார்கள், எல்லா நாட்களிலும் சத்தியத்தை அவர்கள் பின்பற்றுகின்றார்கள். தவறாக நடக்க மிகக் குறைவான செலவே ஆகும் என்றாலும், அவர்கள் சரியாக நடக்கவே தீவிரிப்பார்கள். இப்படிப்பட்ட விசுவாசிகள், மற்ற அவிசுவாசிகளைக்காட்டிலும் மிக அதிக பாடுகளை அனுபவிக்க கூடும். கர்த்தருடைய பார்வையில் நாம் சரியாக நடக்கும்போது தீங்கிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம் என்று நம்மில் அநேகர் நினைக்கிறோம். ஆனால் தேவனுடைய பரிசுத்தவான்களுடைய அனுபவங்களைப் பார்த்தால், தேவன் அப்படிச் செய்வதில்லை என அறிகிறோம். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி எரேமியாவை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். உலகத்தின் ராஜாக்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் பக்கம் அவன் நில்லாமல் தேவன் பக்கம் நின்றான். அவனது செய்கை அவன்மேல் வெறுப்பைக் கொண்டுவந்தது. யூதா ஜனங்கள், எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள் ... இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்று எரேமியா 18:18ல் சொன்னார்கள். ஆலயத்துப் பிரதான விசாரணைக்காரன் அவனை அடித்து, காவலறையிலே போட்டான் என்று எரேமியா 20:2 கூறுகிறது. எரேமியா 38:6, தண்ணீரில்லாத உளையான துரவில் அவனைப் போட்டார்கள்; அந்த உளையிலே அமிழ்ந்தினான் எரேமியா என்கிறது. சிலநேரங்களில் கடுமையான வேதனையை அனுபவித்தபடியால், தேவன் தன்னைத் தள்ளிவிட்டாரோ என அவன் நினைத்தான்.
அன்பானவர்களே, தேவனைக் கனப்படுத்த முயலும்போது நமக்கு அதிக பிரச்சனைகள் வருவதால் நாம் ஆச்சரியப்பட்டு, அத்தகைய சூழலில் நாம் எப்படி வாழ்வது என நினைக்கிறோம். என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் என்று ஆண்டவர் மத்தேயு 5:11,12ல் கூறினதை நமது நினைவில் வைப்போம். அப்படிப்பட்ட சமயங்களில் கண்களை உலகிலிருந்து எடுத்து பரத்தை நோக்கிப் பார்ப்பதால் நாம் பாக்கியவான்கள். இதுவே நம் வாழ்விற்கான சரியான கண்ணோட்டம்!
ஜெபம்: ஆண்டவரே, உமது கட்டளைகளைஉண்மையாக கைகொள்ளும் எனக்கு ஏன் இத்தனை பாடுகள் என்று சிலவேளை நினைக்கிறேன். அவை என் பார்வையை உம்மை நோக்கித் திருப்புகின்றன என உணர்கிறேன். என் பலன் வாழ்நாளில் வராவிட்டாலும், மறுகரையில் அது வருமென நம்புகிறேன். ஆமென்.தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments