சனி, ஜனவரி 24 || கர்த்தர் எப்போதும் உண்மையுள்ளர்!
- Honey Drops for Every Soul

- Jan 24
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: உபாகமம் 4:32-40
நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜணங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய காத்தர்தாமே.. - யோசுவா 24:17
இஸ்ரவேலர் முரட்டாட்டம். கீழ்ப்படியாமை மற்றும் கடினக்கழுத்துள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் எப்போதும் மோசேக்கு விரோதமாகவும் கர்த்தருக்கு விரோதமாகவும் முறுமுறுத்தது நமக்குத் தெரியும். இந்தப் பொல்லாப்பிற்காக அவர்களைக் கர்த்தர் முற்றிலுமாக அழித்து, பூமியிலிராமல் அற்றுப்போகப் பண்ணியிருக்கலாம். ஆனாலும் அவர் அப்படிச் செய்யவில்லை; ஆபிரகாமுக்குக் கொடுத்த தமது வாக்குத்தத்தத்தையும் மறக்கவில்லை. அவர்களோ அவரைப் பரீட்சை பார்ப்பதை நிறுத்தவேயில்லை. சிவந்தசமுத்திரம் அவர்களுக்கு எதிரே நின்றபோது அவரை நம்புவதற்குப் பதிலாக அவருக்கு எதிராகக் கூக்குரலிட்டனர் . (யாத்திராகமம் 14:10 -12) அதன்பின் மாராவில் தண்ணீர் கசப்பாக இருந்ததினிமித்தம் அவர்கள் முறுமுறுத்ததையும் நாம் வாசிக்கலாம். (யாத்திராகமம் 15:23 -24) மன்னாவைக்குறித்தும் தங்கள் வெறுப்பை அவர்கள் வெளிக்காட்டத் தயங்கவில்லை. (யாத்திராகமம் 16) இந்தக் காரியங்கள் கர்த்தரை அதிகமாக விசனப்படுத்தியும் அவர் பொறுமையுடன் இருந்து, வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் அவர்களைப் போஷித்துப் பாதுகாத்து கானானுக்குக் கொண்டு சேர்த்தார். இரவிலே அக்கினி ஸ்தம்பமாக, பகவிலே மேகஸ்தம்பமாக அவர்களை நடத்திய அவரது கிருபைதான் எத்தனை மேன்மையானது! அவர்களது எதிரிகளோடு அவர் போரிட்டு அவர்களை ஒரு தகப்பன் தன் பிள்ளையைத் தோளில் சுமப்பதுபோல சுமந்து வந்தார். அப்படியிருந்தும், தேசத்தை உளவுபார்த்து வந்த மக்களின் வார்த்தைகளைக் கேட்டு எகிப்துக்கே திரும்பிவிடப் போவதாக அவர்கள் கூறியதுதான் அவர்களுடைய முரட்டாட்டத்தின் உச்சக்கட்டமாயிருந்தது. கர்த்தர் கடுங்கோபங்கொண்டு அவர்களைத் தண்டித்தாலும், மனதுருகி அவர்களது பிள்ளைகளைக் கானான் தேசத்தில் கொண்டு சேர்த்தார்.
அன்பு நண்பர்களே, நமது ஆண்டவரின் உண்மையை நாம் உணரவேண்டும். அவர் பொறுமையை நாம் அசட்டை செய்யாமல் நம்மைத் தாழ்த்தி அவர் கையில் ஒப்படைத்து அவரது பாதுகாப்பு பராமரிப்பைப் பெற்று நன்றியுடன் ஜீவிக்கவேண்டும்.ஜெபம்: தேவனே. இஸ்ரவேலர் உம்மை பலமுறை சோதித்தபோதும், வனாந்தரப்பயணத்தில் அவர்களது சந்ததியைப் பாதுகாத்து கானானில் சேர்த்தீரே! அப்படியே நீர் என்னையும் பாதுகாக்கிறீர்; இதை உணர்ந்து நான் உமக்கு உண்மையாய் ஜீவிக்க, நன்றிசொல்ல கிருபைதாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments