top of page

வெள்ளி, டிசம்பர் 13 || தெளிதேன் துளிகள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Dec 13, 2024
  • 1 min read

அன்பே பெரியது!


ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம் ... - கலாத்தியர் 5:22


அவருக்கு மிகவும் பிடித்தமான வேதவசனம் எதுவென்று வேதபண்டிதர் திரு ஜான் ஸ்டாட் அவர்களிடம் கேட்டபோது அவர், கலாத்தியர் 5:22,23ம் வசனங்கள்தாம். கர்த்தருடைய பிள்ளைகளுடைய அனுதின வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக செயல்படவேண்டிய சத்தியங்கள் அடங்கிய வசனங்கள் இவை. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நான் அவற்றை எனது தியானத்திலும், ஜெபவேளையிலும் பயன்படுத்தி, அவை என் வாழ்வில் நிறைவேறவேண்டுமென்று வாஞ்சித்து ஜெபித்திருக்கிறேன் என்று கூறினார். பவுல் இந்த வேதப்பகுதியில் கூறும் முதல் சத்தியம், அன்பு எனும் கிருபையே! இந்த உலகத்திலே மிகச் சிறந்தது அன்பேயாகும்! தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8,16) பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் இந்த சுயநலமற்ற தெய்வீக அன்பினாலே ஒன்றாக இணைக்கப்பட்டு செயல்படுகிறார்கள். இந்த அன்பான தேவன் நம்மேல் அன்பு வைத்திருப்பது மாத்திரமல்ல, நாமும் அவர்மேல் அன்பு வைத்து, மற்றவர்கள் மேலும் அன்புவைக்கவேண்டும் என விரும்புகிறார். அன்பே பிரதானம்! இந்த அன்புதான் கர்த்தருடைய பிள்ளைகளை அடையாளம் காட்டுகிறது. இரண்டாவது சத்தியம், இந்த தெய்வீக அன்பு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டுவருகிறது. ஆனால் உலகத்தாரோ இந்த சந்தோஷம் எனும் வார்த்தையை மகிழ்ச்சி என்ற லௌகீக வார்த்தையினால் குறிப்பிடுகிறார்கள். சந்தோஷம் மற்றும் சமாதானம் இரண்டுமே நாம் தொடரவேண்டிய இலக்குகள் அல்ல; அவை அன்பினால் வரும் விளைவே என்று எழுதுகிறார் ஜான் ஸ்டாட். ஆம்! நாம் இவை இரண்டையும் தேடி அலைவதை விட்டுவிட்டு தேவனை நாம் தேடித் தொடர்வோமானால் அவர் நமக்கு இந்த சந்தோஷம் மற்றும் சமாதானத்தை நிறைவாய் அருளிச்செய்வார். 

அன்பானவர்களே, நமது இதயங்கள் ஆண்டவரது அன்பினால் நிரப்பப்படுமானால், இந்த தன்னலமற்ற அன்பு நம்மிடமிருந்து புறப்பட்டு மற்றவர்களிடத்திலும் வழிந்தோடும். அவர்களுக்கு நாம் அன்பு காட்டும்போது, நமது வாழ்விலும் சந்தோஷமும் சமாதானமும் தானாகவே பெருக்கெடுக்கும். இது மனுஷீக முயற்சியால் சாத்தியமில்லை. ஆவியானவரின் உதவியினால் மாத்திரமே சாத்தியம். எனவே, தமது பரிசுத்த ஆவியால் நம்மை அவர் நிரப்பவேண்டுமென்று நமது பரமதகப்பனிடம் ஜெபிப்போம்.
ஜெபம்:  தேவனே, 1 கொரிந்தியர் 13ல் பவுல், விசுவாசத்தைக்காட்டிலும், அந்நிய பாஷை பேசுவதைக்காட்டிலும், தீர்க்கதரிசனம் உரைப்பதைக் காட்டிலும், சேவை புரிவதைக்காட்டிலும் அன்பே மேலானது என்று கூறுகிறார். மற்றவர்களிடத்தில் நான் அன்பு காட்ட, உமது அன்பினால் என்னை நிரப்பும். ஆமென்

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Komentar

Dinilai 0 dari 5 bintang.
Belum ada penilaian

Tambahkan penilaian
bottom of page