வெள்ளி, ஜனவரி 17 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 17
- 1 min read
புதிய ஆரம்பமும் புதிய நம்பிக்கையும்!
... நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. (ரோமர் 15:13)
தெற்கு அமெரிக்காவின் பெரு என்ற தேசத்தில் மிஷனரிகளாகப் பணியாற்றிய ரூத்தும் பில்லும் தங்கள் தோட்டத்தில் ஆர்க்கிட்ஸ் எனப்படும் அழகான பூச்செடிகளை வளர்த்தார்கள். வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் இந்தவகைப் பூக்கள் மூன்று மாதம் வரை வாடாமல் இருக்கும். அதற்குப்பிறகு அடுத்த சீசன் வரை அவை இலைகளுடன் இருக்கும். சில வருடங்களுக்குப்பின் இவர்கள் வித்தியாசமான பருவநிலை இருந்த மினிசோட்டா மாநிலத்திற்குச் சென்றார்கள். அங்கு அவர்களது மிஷனரிப்பணியில் தேக்கம் ஏற்பட்டது. அதற்கேற்றாற்போல் இந்த ஆர்க்கிட்ஸ் செடிகளிலும் பூக்கள் வரவில்லை. சில வருடங்கள் அவைகளைப் பராமரித்த ரூத் வெறுத்துப்போய் அவற்றை மறைவான இடத்தில் வைத்துவிட்டாள். சில வாரங்கள் கழித்து ஒரு நாள் அந்த இடத்திற்குத் தற்செயலாய் அவள் சென்றபோது, அவற்றில் துளிர்கள் தோன்றியிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த ரூத், தன் கணவன் பில்லிடம், இது நம் ஆண்டவர் நம் மீது இன்னமும் கரிசனையுள்ளவராயிருக்கிறார் என்பதற்கு ஒரு அடையாளம்போல் எனக்குத் தோன்றுகிறது. நிச்சயம் நமக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றாள். நாட்கள் கடந்தன. ஆர்க்கிட்ஸ் பூக்களும் மிக அருமையாகப் பூத்தன; தொடர்ந்து பூத்துக்கொண்டே இருந்தன. அதைக்காட்டிலும் விசேஷமாக, ஆண்டவருக்காக உழைப்பதற்கு இருவருக்கும் அநேக வாய்ப்புகள் குவிந்தன. மிகப்பெரிய ஆத்தும அறுவடையை அவர்கள் கண்டனர்.
அன்பு நண்பர்களே, நம் வாழ்வில் எல்லா நம்பிக்கையையும் இழந்த நேரங்களில், நாம் தைரியமாக, நம்பிக்கையோடு முன்னேறிச்செல்வோம். கர்த்தர் நம்மை நடத்தி, பயன்படுத்தி, அவரது ஆசீர்வாதங்களால் நிறைத்து, மகிழ்ச்சிப்படுத்தி தமது நாமத்தை மகிமைப்படுத்துவார்.
ஜெபம் :தேவனே, உம்மை நம்பும் மனிதன் பாக்கியவான். நீர் அவனை ஒருபோதும் கைவிடமாட்டீர். நான் என் சூழ்நிலையைப் பாராமல் உம்மீது என் கண்களை வைத்து, உம்மையே நம்புவேன். நீர் என்னை உம்முடைய மகிழ்ச்சியினாலும், சமாதானத்தினாலும் நிரப்பும். என்னை உயிர்ப்பித்து, புதுப்பியும். ஆமென்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments