top of page

வெள்ளி, ஜனவரி 03 || தெளிதேன் துளிகள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jan 3
  • 1 min read

வாசிக்க: யோவான் 6: 16-21


பெருங்காற்றிலே அல்ல, இயேசுவிலே நோக்கமாயிருங்கள்


அவர்களை அவர் நோக்கி: நான் தான், பயப்படாதிருங்கள் என்றார். - யோவான் 6:20


இந்த வேதப்பகுதி கூறுகின்ற பெருங்காற்று எதிர்பாராது ஏற்பட்டதல்ல. சீஷர்கள் நடுக் கடலிலிருந்தபோது ஏற்பட்டது, இயேசு சீஷர்களிருந்த படவில் ஏறினபோது நின்றுவிட்டது! ஒரு நோக்கத்துக்காக அது ஏற்பட்டது; நோக்கம் நிறைவேறினவுடன் பெருங்காற்று நின்றுவிட்டது. ஏன் இயேசு சீஷர்களிலிருந்த படவுக்குச் சமீபமாய் வந்தார் என்று நாம் வியக்கலாம். ‡ அப்படி அவர் வந்தது - நடக்க இயலாததை தம்மால் நடக்கவைக்க முடியும் என்று அவர்களுக்குப் போதிப்பதற்காகவே! ஆனால், சீஷர்களோ பயந்தனர். அவர்களது விசுவாசம் பலவீனமானது! ஐயாயிரம் பேருக்கு மேலான ஜனங்களை இயேசு போஷித்ததை அவர்கள் கண்டிருந்தும்கூட, இயேசுவே தேவகுமாரன் என்று விசுவாசிக்கவில்லை. ஆனாலும்கூட, ஆண்டவர் அவர்கள்மேல் காட்டின அருமையான கனிவை நாம் இங்கே காண்கிறோம். அவர்களது பயத்தைக் கண்டவுடனே அவர்களை சாந்தப்படுத்த தொடங்கினார். கடலின்மேல் நடந்தது அவர்கள் பயந்தபடி ஆவேசமல்ல, அவர்களது அன்பிற்குரிய ஆண்டவரான தாம்தான் என்று நிரூபிக்கும்படி, நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்! அவரது வார்த்தைகள் அவர்களை ஆறுதல்படுத்தின!     

அன்பானவர்களே, நாமும்கூட ஆவிக்குரிய விதத்திலும், உணர்வுபூர்வமாகவும் பெருங்காற்றைச் சந்தித்து, திகிலடைந்து உதவியற்றவர்களாகி, பெரிய ஏரியில் அலைபடுகின்ற சிறிய படவுபோல இருக்கிறோம். கடலின்மேல் நடந்த இயேசுவால் நம் வாழ்விலும் நடக்கக்கூடாதவற்றை நடக்கச்செய்ய முடியும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நமது விசுவாசத்தைப் பூரணப்படுத்தவும், பெலப்படுத்தவுமே கர்த்தராகிய தேவன் நம் வாழ்விலும் பெருங்காற்றை அனுப்புகிறார். திகிலூட்டுகின்ற சூழ்நிலைகளிலும், நம் வாழ்வை கிறிஸ்துவிடம் ஒப்படைத்து அவரது பாதுகாப்பில் விட்டுவிடுவோமானால், அவர் எத்தகைய பெருங்காற்றிலும் நமக்கு தமது சமாதானத்தை அருளுவார்.  
ஜெபம்:  ஆண்டவரே, என் வாழ்விலே நான் பெருங்காற்றுகளை சந்திக்கையில் நான் திகிலடையாது, நடக்காதவற்றை நடக்கச்செய்யும் உம்மை நோக்குவேன். நீர் மட்டுமே என் வாழ்வின் கடின சூழ்நிலைகளை மாற்றி, சமாதானம் தரமுடியும்.  உமது வாக்கை முற்றிலும் நம்பி தைரியமாய் நடக்க எனக்கு உதவும். ஆமென். 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page