top of page

வெள்ளி, ஜூலை 18 || கோபம் கொலைக்குச் சமம்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 18
  • 1 min read


தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்.  - 1 யோவான் 3: 15



மத்தேயு 5:21ல் இயேசு, கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்று கூறினார். பத்து கட்டளைகளில் ஒன்று கொலை செய்யாதிருப்பாயாக என்பதாகும். ஒருவேளை சட்டத்தின், சமுதாயத்தின் கண்களில் நாம் கொலைகாரர்களாக இருக்கமாட்டோம். ஆனால், கர்த்தரின் கண்களில்? தமது மலைப்பிரசங்கத்தில் ஆண்டவர் இயேசு நமக்கு வரையறுத்த புதிய வரைமுறையின்படி, நாம் யாரையும் கொலைசெய்யாவிட்டாலும், நம் சகோதரனைக் கோபித்துக் கொண்டாலே போதும், அதுவே கொலைக்குச் சமமாகத்தான் தேவசமுகத்தில் கருதப்படும். கொலைக்குரிய நியாயத்தீர்ப்பே வழங்கப்படும். முக்கியமாக, மூடனே என்ற வார்த்தையைத் திட்டுவதற்குப் பயன்படுத்தினாலே நியாயத்தீர்ப்பு உண்டு! மத்தேயு 5:22ல் இயேசு, முடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான் என்று கூறினார். 1 யோவான் 3:15, தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான் என்று கூறுகிறது. 


பிரியமானவர்களே, இதற்குப் பரிகாரமே இல்லையா? ஆண்டவர் இயேசுவே கூறியது: உன் சகோதரனுக்கு உன்பேரில் குறையுண்டானால் நீ அவனிடம் போய் அவனோட ஒப்புரவாகு என்பதே! எனவே, நாம் கோபத்தையும் வெறுப்பையும் முளையிலேயே கிள்ளிவிடுவோம். 

ஜெபம்: ஆண்டவரே, நான் யாரையும் கொலைசெய்யவில்லை என்பது உண்மையானாலும், என் சகோதர சகோதரிகளைக் கோபித்துக்கொண்டு, அதினிமித்தம் கொலைகாரனாயிருக்கிறேன். கிருபையாக என்னை மன்னியும். அப்படியே நான் மற்றவர்களை மன்னிக்கவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page