top of page

வெள்ளி, ஆகஸ்ட் 15 || எங்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடும் கர்த்தாவே!

  • Aug 15, 2025
  • 1 min read


என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால்.. நான்.. தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.

- 2 நாளாகமம் 7:14


நாம் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தால் அதைக்கேட்டு நமது தேசத்தை அவர் ஆசீர்வதிக்கத் தயாராயிருக்கிறார். வேறுவார்த்தையில் சொல்லப்போனால் தேசத்தின் எழுப்புதல் தேவபிள்ளைகளின் கரத்தில்தான் இருக்கிறது. ஆயினும், அதற்கும் சில நிபந்தனைகள் உண்டு.

முதலாவது, அவர்கள் தங்களைத் தாழ்த்தவேண்டும். பெருமையுள்ளவர்களுக்குக் கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். (யாக்கோபு 4:6)

இரண்டாவதாக, கர்த்தருடைய பிள்ளைகள் ஜெபிக்கவேண்டும். நம்மில் அநேகர் நமக்கு ஏதாவது தேவையிருந்தால் மட்டுமே ஜெபிக்கிறோம். ஆனால், அதைக்காட்டிலும் ஆண்டவர் தம் ஜனங்கள் தன்மேல் உள்ள வாஞ்சையால் தன்னுடன் பேசவேண்டும் என விரும்புகிறார். சுயநலமின்மை, தைரியம், காரணம் கூறி ஜெபித்தல் மற்றும் குறிப்பிட்டு ஜெபித்தல் ஆகிய நான்கு குணாதிசயங்கள் ஜெபத்திற்கு இருக்கவேண்டும் என்று செல்வின் ஹ்யூக்ஸ் எழுதுகிறார்.

மூன்றாவதாக, அவரது பிள்ளைகள் அவரது முகத்தை நோக்கவேண்டும். ஆனால், பாவத்தை அறிக்கையிடாமல், மனந்திரும்பாமல், கர்த்தரிடத்திலும் மற்றவர்களிடத்திலும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் இது சாத்தியமில்லை. (மத்தேயு 5:23,24; 6:14,15)

கடைசியாக, நாம் நமது பொல்லாத வழிகளைவிட்டு மனந்திரும்பவும் வேண்டும். சங்கீதம் 66:18ல், நமது இருதயங்களில் அக்கிரம சிந்தை இருக்குமானால் தேவன் நமது ஜெபங்களுக்கு செவிகொடுக்கமாட்டார் என சங்கீதக்காரன் கூறுகிறார். எனவே, நமது ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவேண்டுமானால் பாவங்களை அறிக்கையிடுவது மட்டுமல்ல, அறவே விட்டுவிடவும் வேண்டும். 


  அன்பான நண்பர்களே, நமது தேசத்தின் தலைவிதி நம் கையில் மட்டுமே உள்ளது. நாம் நமது தேசத்தில் குறைவான சதவீதத்தினராக இருக்கலாம்; ஆனால் நாம் நம்மைத் தாழ்த்தி, ஜெபித்து, கர்த்தரது முகத்தைத் தேடி, நம் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பும்போது, நம் நாட்டில் ஒரு பெரிய எழுப்புதலை நிச்சயமாகக் கொண்டுவர முடியும்.

ஜெபம்: தேவனே, இந்தியா சுதந்திரம் பெற்ற இந்நாளிலே, நீர் தேசத்தை ஆசீர்வதிக்கவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். என் ஜெபம் கேட்கப்படும்படி, என்னைத் தாழ்த்த, மனந்திரும்பி மன்னிப்பு பெற, உமது முகத்தையே நோக்கி எனது பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்ப உம் கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page