வெள்ளி, ஆகஸ்ட் 08 || தேவன் தரும் பொன்னான வாய்ப்பைப் பிடித்துக்கொள்
- Honey Drops for Every Soul

- Aug 8
- 1 min read
வாசிக்க: கலாத்தியர் 6: 4-10
ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் ... நன்மைசெய்யக்கடவோம். - கலாத்தியர் 6:10
நாம் நன்மைசெய்யக்கடவோம் என்று சொல்லும்போது தான் செய்த, செய்யப்போகின்ற எல்லா நன்மைகளை நினைத்தவராய் தன்னையும் சேர்த்துக்கொள்கிறார் பவுல். இந்த வாழ்வில் நாம் செய்கின்ற நன்மைகளின் நித்திய மதிப்பு என்ன என்பதைப் பவுல் நன்கு அறிந்திருந்தார். இவ்வுலகிலே நாம் செய்யும் நன்மையான செயல்கள் தேவனிடமிருந்து எந்தவித சலுகையை இங்கே கொண்டுவராவிட்டாலும், அவருடைய ஆச்சரியமான, பெருந்தன்மையான கிருபையினால் பரலோகின் நித்திய வாழ்விலே தேவன் அந்த நன்மைகளுக்காக வெகுமதியை நமக்குத் தருவார். நன்மை செய்வதற்கான வாய்ப்பு எதுவரை நமக்குக் கிடைக்குமென்று நமக்குத் தெரியாது, ஆனால் நமது கடைசி மூச்சுக்குப் பிறகு அது இருக்காது என்பது நமக்கு நிச்சயம் தெரியும். நம்முடைய வாழ்விற்கு தேவன் எல்லையைக் குறித்திருக்கிறார். அந்த எல்லை வரை நன்மைசெய்யும் வாய்ப்பு நமக்கு இருக்கும். ஆகவே, இந்தப் பொல்லாத உலகில் வாழும் நாம், சமயத்தை வீணாக்காமல், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தேவனுடைய நோக்கம் நிறைவேறத்தக்கதாக அவரைத் தொழுதுகொள்ளவும், நன்மையான காரியங்களைச் செய்யவும் பயன்படுத்துவோம்.
அன்பானவர்களே, நன்மைசெய்கின்ற வாய்ப்புகளை நம் ஒவ்வொருவருக்கும் தேவன் தருகிறார் - ஒவ்வொரு நாளிலும் திறந்த கதவுகள் நமக்கு முன் இருக்கிறது; வாய்ப்புகள் அங்கே ஏராளம்! தேவன் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும்போது மட்டும்தான் அவருடைய சேவையில் நம் முழு ஆற்றலையும் பயனுள்ள வகையில் நம்மால் பயன்படுத்திக்கொள்ளமுடியும். தொடர்ச்சியாய் தேவ ஆவியினால் நிரப்பப்பட்டு, அவரால் நடத்தப்பட்டால், (கலாத்தியர் 5:16), ஆவிக்குரிய வாய்ப்பை நழுவவிடாது, பிடித்துக்கொள்ளும்படி எச்சரிக்கையாயிருக்க நம்மை அவர் பலப்படுத்துவார். இன்று நமக்கு முன்பு வருகின்ற வாய்ப்புகள் என்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம்? நாம் ஞானமாய் நடப்போம். நற்செயல்களை சுயமுயற்சியோடு அல்லது தற்சார்போடு நம்மால் செய்யக்கூடாது; நம்மில் கிரியை செய்கின்ற ஆவியானவர் மட்டுமே நமக்கு உந்துதலைத் தந்து நற்செயல்களைச் செய்ய நம்மை நடத்தமுடியும். எனவே, நாம் ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாக, தேவையுள்ளோருக்கு நற்செயல்களைச் செய்வோம்.
ஜெபம்: ஒரே ஒரு வாழ்க்கை, அது சீக்கிரம் கடந்துபோகும்; கிறிஸ்துவுக்காகச் செய்வதே நிற்கும். ஆண்டவரே, உம் ஆவியால் என்னை நிரப்பும். வருகின்ற பொன்னான வாய்ப்புகளை நான் கண்டு, நழுவவிடாமல் பிடித்துக்கொண்டு, தேவையுள்ள மக்களுக்கு நன்மைகளைச் செய்ய எனக்கு உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments