top of page

வியாழன், ஜனவரி 16 || தெளிதேன் துளிகள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jan 15
  • 1 min read

ஜெபத்தின் முக்கோணப் பரிமாணம் - மன்றாட்டு!



... பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?   (மத்தேயு 7:11)



மன்றாட்டு என்பது ஒரு நண்பனது பாரத்தை நாம் சுமப்பது, ஒருவர் மற்றொருவருக்காக வேறொருவரிடம் சென்று அவர் சார்பில் பரிந்துபேசுவதே மன்றாட்டு ஜெபம். இது ஒரு முக்கோணப் பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. இன்றைய வேதப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் உவமையிலும் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு மனிதனுடைய நண்பன் இக்கட்டான நள்ளிரவு நேரத்தில் அவனது வீட்டுக் கதவைத் தட்டுகிறான். நண்பன் கதவைத் திறந்தபோது வந்திருக்கிறவனுடைய முகம் நீண்ட பயணத்தால் களைத்துப்போயிருப்பதையும், அவன் பசியுடனிருப்பதையும் உணருகிறான். நண்பனை உள்ளே அழைத்து அமரச்செய்துவிட்டு தன் வீட்டு சமையலறைக்குள் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கிறான்; ஒன்றுமே இல்லை. திரும்பிவந்து தன் நண்பனின் களைத்துப்போன முகத்தைப் பார்க்கிறான்; மனம் கேட்கவில்லை. எனவே தனது பக்கத்து வீட்டுக்காரனிடம் சென்று அவனது வீட்டுக் கதவைத் தட்டுகிறான். வீட்டுக்காரனோ, தயவுசெய்து தொந்தரவு செய்யாதே, நானும் என் பிள்ளைகளும் படுத்துவிட்டோம். இப்போது என்னால் எழுந்துவந்து உதவி செய்யமுடியாது என்கிறான். ஆனாலும் இவன் தன் வெட்கத்தைவிட்டு விடாப்பிடியாய் கேட்டுக்கொண்டே இருக்கிறான். ஏன்? தன் நண்பனின் தேவையைத் தன் தேவையாகக் கருதியது மட்டுமல்ல, தேவையின் அவசரத்தையும் உணர்ந்ததால் அப்படிச் செய்ய அவன் சற்றும் தயங்கவில்லை. 



அன்பானவர்களே, மன்றாட்டு ஜெபம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். அது விடாப்பிடியான, அவசர வேண்டுகோளாய் இருக்கவேண்டும். மற்றவர்களது தேவை நம் தேவையாய் பார்க்கப்படவேண்டும். தேவையின் அவசரம் உணரப்படவேண்டும். அப்படி நாமும் நமது நண்பர்கள், அயல்வீட்டுக்காரர்கள் மற்றும் உறவினர்களுக்காக ஜெபித்து தேவனிடத்திலிருந்து பதிலைப் பெற்றுத் தருவோம்.



ஜெபம்: தேவனே, எனது நண்பனுக்கு தேவை ஒன்று உண்டென்று நான் அறியும்போது, என் இருதயத்தில் நான் இரக்கம் கொண்டு என்னாலான உதவியை அவனுக்குச் செய்ய எனக்கு கிருபை தாரும். அவனது தேவைகளை உம்மிடத்தில் சொல்லி மன்றாடி பதிலைப் பெற்றுத்தர எனக்கு உதவும்.  ஆமென்.

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page