வியாழன், ஜூலை 10 || நமது அனைத்து பாவங்களைவிட தேவ கிருபை பெரியது
- Honey Drops for Every Soul

- Jul 10
- 1 min read
வாசிக்க: ரோமர் 8: 18-21
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ... - ரோமர் 3:23
பாவத்தை - மீறுதல் என்றும், தேவ இறையாண்மைக்கு எதிரான கலகம் என்றும், அவரது வார்த்தையை, அவருடைய ஆள்தத்துவத்தை அசட்டைபண்ணுவது என்றும், தேவனையே மறுதலிப்பது என்றும் வேதாகமம் விளக்குகிறது. நம் பாவத்தின் நிமித்தம் நாம் இயல்பாகவே தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளானோம் என்று பவுல் எழுதியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. (எபேசியர் 2:3) விசுவாசிகளாகிய நமக்கு, பாவத்தைப்பற்றிய இத்தகைய விளக்கங்கள் பொருந்தாது என்று நினைக்கிறோம். நம்மைச்சுற்றியுள்ள சமுதாயத்தின் பாவங்களைப் பார்த்து, அந்தச் செயல்களின் அடிப்படையில் பாவத்தை நிர்ணயம் செய்கிறோம். நமது கவலை, அதிருப்தி, தேவனுக்கு எதிரான நமது நன்றியற்ற தன்மை, நமது பெருமை மற்றும் நம் சுயநலம், பிறரை விமர்சித்து தீர்ப்பளிக்கின்ற மனப்பான்மை, நமது புறங்கூறுதல், அன்பற்ற வார்த்தைகள், மற்ற சிறிய பாவங்கள் தேவனுக்கு எதிரானவை, அவர் வார்த்தையை அவமாக்குபவை என்பதை உணரத் தவறுகிறோம். ஆனால் ரோமர் 5:20ல் நமக்கு ஒரு நற்செய்தி உண்டு: ஆயினும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. பாவம் பெருகின இடத்தில் தேவ கோபம், அவர் நியாயத்தீர்ப்பு அதிகமாய்ப் பெருகும் என்று நாம் நினைத்திருக்கலாம். ஆனால், அவருடைய அன்பு மிகவும் அற்புதமாயிருப்பதால், கோபம் பெருகும் என்று நாம் எதிர்பார்த்த இடத்தில் அவரது கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
மார்ட்டின் லாயிட் ஜோன்ஸ், திறந்த பெருவெள்ளம் முன்னிருக்கும் அனைத்தையும் அடித்துச்செல்வதுபோல், தேவகிருபையும் நிரம்பி வழிகிறது என்கிறார்.
ஸ்பர்ஜன், பாவம் ஒரு நதிபோல இருக்கலாம், ஆனால் கிருபை சமுத்திரம்போல இருக்கிறது.
பாவம் ஒரு பர்வதம்போல இருக்கலாம், ஆனால் கிருபை நோவா காலத்து வெள்ளம்போல பர்வதத்தின் உச்சிக்கு மேலாக எழும்பி வியாபிக்கிறது என்கிறார்.
அன்பானவர்களே, இதன் அர்த்தம், தேவன் பாவத்தைப் பொறுத்துக்கொள்கிறார் என்பதல்ல, பாவத்தை அவர் வெறுக்கிறார் என்றாலும், பாவத்தை நீக்கி, அதன்மேல் நமக்கு வெற்றி தருவதற்கே தொடர்ந்து செயலாற்றுகிறார் என்பதே.ஜெபம்: ஆண்டவரே, சென்ற நாளில் இரட்சிக்கப்பட்டு, நல்ல கிறிஸ்தவன் ஆனேன்; இன்று பாவம் செய்தபடியால் என்றென்றும் மோசமான கிறிஸ்தவனாக இருக்க தண்டனை பெற்றேன் என்று நான் சிலவேளை எண்ணுகிறேன். உம் கிருபை என்மேல் பெருகுவதற்கு என் பாவம் தடையாயிராது என்று நீர் எனக்கு வெளிப்படுத்தியமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments