top of page

வியாழன், செப்டம்பர் 25 || பரிசுத்த ஜீவியத்தில் உலகத்திற்கு இடமில்லை!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Sep 25
  • 1 min read

தெளிதேன் துளிகள் வாசிக்க: 2 கொரிந்தியர் 6: 14-18


 .அவர்கள்.. போல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. - 1 கொரிந்தியர் 10:6


அன்று ஆபிராமுக்குக் கர்த்தர் கொடுத்த முதல் கட்டளை, நீ என் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ  என்பதுதான். (ஆதியாகமம் 12:1) கர்த்தர் தனக்குச் சொன்னபடியே ஆபிராம் புறப்பட்டுப்போனான். தன் உறவினனாகிய லோத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். இதினிமித்தம் ஆபிராமுக்கு அநேக பாடுகள் வந்தன. ஆபிராம் விசுவாச வீரன்; லோத்து உலகப்பிரகாரமானவன். ஆகையால் இருவரும் ஒத்துப்போகமுடியாத சூழல் உண்டானது.  சில நாட்களில் லோத்து எதிரிகளால் சிறைப்பிடிக்கப்பட்டதால் ஆபிராம் தன் உயிரைப் பணயம் வைத்துப் போரிட்டு அவனைக் காப்பாற்றவேண்டியதாயிற்று.   

 

அன்பானவர்களே, விசுவாச வாழ்க்கை வாழவேண்டும் என்றால் தீமையான எல்லாவற்றிற்கும் விலகியிருக்கவேண்டும். இதில் எந்தவித சந்தேகமும் கூடாது. 2 கொரிந்தியர் 6:14,17ல், அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளோடு இணைக்கப்படக்கூடாது என்று பவுல் எழுதுகிறார். அதாவது விசுவாசப் பாதையில் நாம் நடக்கவேண்டும் என்றால் ஆண்டவர் பக்கம் சாயவேண்டுமே தவிர உலகத்தின் பக்கம் சாயக்கூடாது. அவரது வார்த்தை என்ன சொல்கிறதோ அதை அப்படியே நம்பி, சற்றும் பிறழாமல் அதன்படியே செய்யவேண்டும். அப்படி ஒரு பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழத் தொடங்கியபின், இவ்வுலகத்தின் ஈர்ப்புகளில் மறுபடியும் சம்பந்தப்படக்கூடாது. அவிசுவாசிகளுடன் நட்பே கூடாது என்று சொல்லவில்லை; ஆனால், நட்பு வேறு உறவு வேறு என்பதை நிச்சயம் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஏனெனில், அவர்கள் நம்மை அவர்களது எண்ணங்களுக்குச் சாயச் செய்துவிட்டார்களானால் நமது விசுவாச வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும். கவனமாயிருந்து, கர்த்தர் பக்கம் நின்று, அவர் பெலன் பெற்று நம்மைக் காத்துக்கொண்டு, பரிசுத்தமாய் ஜீவிப்போம். பரம தரிசனத்தை இழந்துபோகாதிருப்போம்.

ஜெபம்: சர்வவல்லவரே, லோத்துவைத் தன்னுடன் அழைத்துச் சென்ற ஒரு தவறை ஆபிராம் செய்ததினிமித்தம் அவன் படநேர்ந்த பாடுகளை அறிந்தேன். நானும் தேவையற்ற காரியங்களைச் செய்துவிடாமல், தேவவார்த்தை என்ன சொல்கிறதோ அப்படியே நடந்து பரிசுத்தமாய் ஜீவிக்க கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page