top of page

வியாழன், ஆகஸ்ட் 07 || கர்த்தருடைய அழைப்பைப் புறக்கணிக்காதிருங்கள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 7
  • 1 min read

வாசிக்க: எரேமியா 1: 4-10


... நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி ...  

- எரேமியா 1:5


எரேமியா கர்த்தரது பணிக்காகப் பிரித்தெடுக்கப்பட்டான். அவன் கர்ப்பத்திலிருக்கும்போதே கர்த்தர், ஒரு விசேஷித்த பணிக்காகக் எரேமியாவைக் குறித்துவைத்தார். எரேமியா தேசங்களுக்கு தீர்க்கதரிசியாய் நியமிக்கப்பட்டான். ஆனால், அவரது நியமனத்திற்கு எரேமியா மறுப்பு தெரிவித்தான். முதலாவதாக, பேச அறியாதவன் என்று கூறி மறுப்பைத் தெரிவித்தான். பேசும் திறமை தனக்கில்லாதபடியால், மக்கள் மத்தியில் ஊழியம் செய்யத் தனக்குத் தகுதியில்லை என்று சொன்னான். மேலும், தான் ஒரே பிள்ளை என்பதால் தன் மறுப்பைத் தெரிவித்தான். வேதத்தில் எரேமியாவின் வயது குறிப்பிடப்படவில்லை என்றாலும், அந்தக் காலக்கட்டத்தில், அவனுக்குப் பதின்பருவமோ, இருபது வயதோ இருந்திருக்கலாம். சிறுவயதின் அனுபவமற்ற நிலை அநேக தேசங்களுக்குத் தேவனது ஸ்தானாபதியாய் இருப்பதற்கான தயார்நிலை தனக்கில்லை என்று எரேமியா வலியுறுத்தினான் என்கிறது அவன் பயன்படுத்திய சிறுபிள்ளை என்ற வார்த்தை. அவனது மறுப்புக்குக் கர்த்தர் மூன்றுவித பதிலைக் கொடுத்தார். முதலாவது அவர் எரேமியாவுக்கு சொன்னது: அனுபவமின்மையை ஒரு சாக்காகச் சொல்லி, தன் வேலையை விட்டு அவன் நழுவக்கூடாது. மேலும் அவர் சொன்னது: தான் சொல்லும் செய்தியையோ, அதைக் கேட்பவர்களையோ அவன் தீர்மானம் செய்யக்கூடாது. அதற்கு மாறாக, அவர் சொல்லுகிறவர்களிடத்தில் அவன் போய் அவர் கட்டளையிட்டவற்றைச் சொல்லவேண்டும் என்றார். இரண்டாவதாக, தன் சொந்தப் பாதுகாப்பைக்குறித்து எரேமியா கவலைப்பட்டதால், தாமே எல்லாப் பக்கமும் அவனோடு இருந்து, எதிரிகளிடமிருந்து அவனை தப்புவிக்கப்போவதாகவும் அவர் கூறினார். மூன்றாவதாக, எரேமியாவின் வாயிலே தம்முடைய வார்த்தைகளைத் தாம் வைக்கப்போவதாகவும் கூறினார் கர்த்தர். ஆம்! என்ன பேசுவது என்பதைக்குறித்து எரேமியா சற்றேனும் கவலைப்படத் தேவையில்லை. அவன் என்ன பேசவேண்டுமோ அதற்கான வார்த்தைகளைக் கர்த்தரே அப்போது அவனுக்குக் கொடுத்துவிடுவார்!  


 அன்பானவர்களே, கர்த்தர் நம்மை அழைக்கும்போது, அந்த அழைப்புக்குக் கீழ்ப்படிய நாம் தயங்கவே வேண்டாம்; ஏனென்றால் நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராய் இருக்கிறாரல்லவா! தாம் நமக்குக் கொடுக்கின்ற வேலையை நாம் செய்து முடிக்கும்படி நம்மை நிச்சயமாய்த் தகுதிப்படுத்துவார் அவர்!

ஜெபம்: ஆண்டவரே, நான் கர்ப்பத்திலிருக்கும்போதே நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். நான் பயத்துக்கும், சந்தேகத்துக்கும் சற்றும் இடங்கொடுக்காமல், என்னோடு நீர் இருக்கிறீர், நீர் தந்த வேலையை நான் செய்துமுடிக்க என்னைத் தகுதிப்படுத்துவீர் என்று உம்மேல் நம்பிக்கை வைப்பேன். நீர் என்னை எங்கே அனுப்பினாலும் நான் நீர் தருகின்ற வல்லமையோடு தைரியமாய் அங்கே செல்ல உதவும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page