புதன், ஜூலை 23 || பலன் தரும் ஜெபவாழ்வு
- Honey Drops for Every Soul

- Jul 23
- 1 min read
வாசிக்க: சங்கீதம் 139: 23,24; 19: 12-14
... மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்... - சங்கீதம் 19:12,13
நிலையான ஜெபவாழ்க்கை நமக்கு இருக்கிறதா? நீங்கள் உங்கள் ஜெபவாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பினால்,
முதலாவது, அந்த நாளில் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்துப் பாருங்கள். அவர் தந்த பாதுகாப்பு, அவர் சந்தித்த தேவைகள், அவரிடமிருந்து கிடைத்த வழிநடத்துதல் இவைகளை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துங்கள்.
இரண்டாவதாக, அவரது சமுகத்தில் உங்களை ஆராய்ந்து பாருங்கள். நமது பலவீனம் இன்னதென்று பிசாசுக்கு நன்றாகத் தெரியும். எனவே, நம்மை அவன் அனுதினமும் குறிவைத்துக்கொண்டே இருக்கிறான். உதாரணத்திற்கு, இனி கோபப்படவே கூடாது என்று முடிவெடுத்தோமானால் அப்போதுதான் சில மனுஷரையோ அல்லது சில சந்தர்ப்பங்களையோ நமக்கெதிராகக் கொண்டுவந்து நமது கோபத்தை தூண்டிவிடுவான். நாம் அவனுக்கு இடம் கொடுக்காமலிருக்கவேண்டுமானால் ஆண்டவரது உதவியை நாடவேண்டும்.
மூன்றாவதாக, உங்கள் பலவீனத்தை ஆண்டவரிடம் அறிக்கையிடுங்கள். தமது பரிசுத்த ஆவியின் உதவியால் அவர் உங்களைப் பலப்படுத்தி சோதனையை மேற்கொள்ள உங்களுக்கு சத்துவத்தை அருளுவார்.
அன்பு நண்பர்களே, ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் ஜெபிப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம், தூக்கமும் வரலாம்; தொடர்ந்து ஊக்கமாய் ஜெபிக்க அவரிடம் கிருபையைக் கேளுங்கள். அப்படி விடாமுயற்சியுடன் தொடர்ந்தால் நிச்சயம் அவர் உதவி செய்வார். உங்களது ஆவிக்குரிய வாழ்க்கை மேம்படும். ஜெபம்: தேவனே, இரவில் தூக்கம் என் கண்களைச் சுழற்றுவதால் பலமுறை ஜெபிக்காமலே தூங்கிவிடுகிறேன். இனியாவது, படுக்கப்போகுமுன் பெற்றுக்கொண்ட நன்மைகளை நினைத்து நன்றி சொல்லி, எனது பலவீனங்களை அறிக்கையிட்டு உமது ஆவியின் பெலன்பெற்று வாழ கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments