top of page

புதன், ஜூலை 16 || பணத்தைச் சேமிப்பது பாவமா?

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 16
  • 1 min read

வாசிக்க: லூக்கா 18: 18-27


... உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். - 1 தீமோத்தேயு 6:7


பணத்திற்கு ஒரு வேடிக்கையான குணமுண்டு. அது தன்னை உடையவர்களின் உள்ளத்தில் ஒருவித மேட்டிமையை உருவாக்குவதோடு, இன்னும் அதிகமாக இச்சிக்கத் தூண்டியும் விடுகிறது. இன்னும் அதிகம் சம்பாதி, இன்னும் அதிகம் சேர்த்து வை என்பதே இப்படிப்பட்ட மக்களின் உயிர்மூச்சாகிவிடுகிறது. ஆனால், சம்பாத்தியமோ அல்லது சேமிப்போ தன்னிலே தானே தவறானதல்ல. ஆனால், நம் சேமிப்பு சரியான முறையில் செலவழிக்கப்படவேண்டும். அதாவது, தேவையிலுள்ளவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். சம்பாதியுங்கள், சேமியுங்கள், கொடுங்கள். இதுவே ஜான் வெஸ்லியின் ஆலோசனை. இது இயேசுவின் போதனைக்கு ஒத்திருக்கிறது. இயேசு ஒருபோதும் பணம் சம்பாதிப்பதையோ, சேமிப்பதையோ குறைகூறவில்லை. ஆனால், அளவுக்கதிகமாக சேர்த்து வைப்பதையே அவர் குற்றம் என்றார். ஆங்கிலத்தில் சேவிங் ஓ கே! ஆனால் ஸ்டோரிங் அல்லது ஹோர்டிங் தவிர்க்கப்படவேண்டும். மேலும், இயேசு, இந்த உலகில் நாம் முதலீடு செய்யும் எதுவுமே நிரந்தரமானதல்ல என்றும், நமது செல்வம் பரலோகப் பொக்கிஷமாகவே சேர்க்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதுமில்லை. (மத்தேயு 6: 19,20)


அன்பானவர்களே, நாம் என்ன செய்கிறோம்? இங்கேயா? அங்கேயா? எங்கே சேர்த்துவைக்கிறோம்? இங்கேயானால் நாம் மரிக்கும்போது எல்லாவற்றையும் இங்கேயே விட்டுச் செல்லவேண்டியதாயிருக்கும். எதையும் பரலோகத்திற்குக் கொண்டுசெல்லமுடியாது. சேமிப்போம். கொடுப்போம். பரலோகத்தில் சேர்ப்போம். இதுவே நன்மை. அதுவே இயேசுவின் போதனை. 

ஜெபம்: பரம தகப்பனே, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கு எனக்கு நீர் பெலனைத் தரும்போது நான் சுயநலமாக சேர்த்துவைப்பதைத் தவிர்த்து, தேவையிலுள்ள மற்றவர்களுக்குக் கொடுத்து, என் பொக்கிஷத்தைப் பரலோகத்தில் சேர்த்துவைக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page