top of page

புதன், ஜூன் 25 || பேசும் வார்த்தைகளைக் குறித்து கவனமாயிருங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 25
  • 1 min read

வாசிக்க: 1 சாமுவேல் 14: 24-32


அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்.

- யோபு 5:13

... மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.      

-நீதிமொழிகள் 14:16


நமது ஆவிக்குரிய நிலைமை நமது செயல்களால் மட்டுமல்ல, நமது சொற்களாலும் வெளிப்படுகிறது என்று வாரன் வியர்ஸ்பி எழுதுகிறார். ஏனெனில், இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது. (மத்தேயு 12:34) ராஜாவாகிய சவுல் பெலிஸ்தருடன் யுத்தம்செய்யப் போவதற்குமுன், எல்லாப் படைவீரர்களும் உபவாசம் இருக்கவேண்டும் என்று மூடத்தனமான ஒரு கட்டளையைப் பிறப்பித்தான். சாயங்காலம் மட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அவன் சொல்லியிருந்தான். (1 சாமுவேல் 14:24) அவர்களது உபவாசத்தைக் கண்டு கர்த்தர் மகிழ்ந்து தங்களுக்கு வெற்றியைக் கட்டளையிடுவார் என அவன் நம்பினான். ஞானமுள்ள எந்தப் படைத்தலைவனும் ஒரு போருக்குமுன் தன் போர்வீரர்களுக்கு உணவை விலக்கமாட்டான். ஆனால் சவுலின் மூடத்தனத்தினால், படைவீரர்களால் எதிரியைப் பின்தொடரமுடியாமல் போயிற்று. எனினும், சவுலின் மகன் யோனத்தானின் விசுவாசத்தையும் தைரியத்தையும் கனப்படுத்தி, அவன் நிமித்தம் இஸ்ரவேலருக்கு ஒரு பெரிய வெற்றியைக் கர்த்தர் கட்டளையிட்டார். உணவைத் தவிர்த்ததினால் விடாய்த்துப்போயிருந்த இஸ்ரவேல் வீரர்கள், சாயங்காலமானதும் கொள்ளையின்மேல் பாய்ந்து ஆடுகள் மாடுகள் கன்றுகளைப் பிடித்து தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள். அப்படிச் செய்ததினால் கர்த்தரின் கட்டளையை மீறி பாவம் செய்தார்கள். (லேவியராகமம் 3:17)


அன்பானவர்களே, நாம் கர்த்தருக்குப் பயந்து அவரது ஆலோசனையின்படி நடக்கவேண்டும். சவுலைப்போல, தேவையற்ற மூடத்தனமான வார்த்தைகளைப் பேசிவிட்டு, அதினால் வரும் விளைவுகளுக்காக பின்னால் வருத்தப்படக்கூடாது. நமது வார்த்தைகளை நாம் காத்துக்கொள்ளவேண்டும்.

ஜெபம்: தேவனே, நான் ஒரு முடிவை எடுக்குமுன் உமது பாதத்தில் காத்திருந்து உம் ஆலோசனைப்படி செய்ய கிருபை தாரும். எனது துணிச்சலினால் மூடத்தனமாக எதையும் பேசி மோசமான பின்விளைவுகளைச் சந்திக்காமலிருக்கவும், உமது வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்படியவும் உதவி செய்யும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page