top of page

புதன், ஜூன் 18 || இயேசுவுக்காக உறுதியாக நில்லுங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 18
  • 1 min read

வாசிக்க: ரோமர் 8: 28-39


தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? - ரோமர் 8:31

காங்கோ நாட்டில், கொரில்லா படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஒரு பள்ளியைத் தாக்க வருகிறார்கள் என்று தெரிந்ததும் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் அவரவரது வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். ஒன்பது வயது பால் ஓடுவதற்கு சிரமப்பட்டான். கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டான். உன் வகுப்பு பிள்ளைகள் எங்கே என்று அவனைப் பார்த்து அவர்கள் கத்தினர். பயத்தினால் உறைந்துபோயிருந்த அவனால் வாயையே திறக்கமுடியவில்லை. ஆனாலும், என்ன ஆனாலும் சரி, நண்பர்களை நான் காட்டிக்கொடுப்பதில்லை என முடிவு செய்தான். அப்போது ஒருவன் அவனைக் கீழே தள்ளி, அடித்து உதைத்தான். திடீரென பால் செவிடும் ஊமையுமாக இருந்த தன் வகுப்பு மாணவன் ஜாக்கை நினைவுகூர்ந்து அவனைப் போலவே நடிக்க ஆரம்பித்தான். உன் வாயைத் திறந்து அவர்கள் எங்கே என்று சொல்; இல்லையெனில் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று வந்தவர்கள் மிரட்ட, அவன் பெ பெ பே என்று பிதற்றிக் கொண்டே இருந்தான். திடீரென அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், இவனால் எதுவும் பேசமுடியாது. இவன் ஒரு ஊமை. நாம் நமது நேரத்தைத்தான் வீணடித்துக்கொண்டிருக்கிறாம் என்றான். உடனே, எல்லோரும் வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.  


அன்பானவர்களே, பால் சில நாட்களுக்கு முன்னர்தான் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொணடான். எனவேதான், பால் கொடூரமான அந்தக் கொரில்லாக்களின் கையில் பாடனுபவிக்க நேர்ந்தபோதும் உறுதியாக நின்றான். கர்த்தர் அவனது உறுதியைக் கனம் பண்ணினார்.  அவனோடிருந்து அந்தக் கொடியவர்களின் கைக்கு அவனது ஜீவனைத் தப்புவித்தார். 

அன்பானவர்களே, பால் இயேசுவுக்காகக் காட்டிய வைராக்கியமும், அர்ப்பணிப்பும் இன்று நம் வாழ்வில் இருக்கிறதா? நம் விசுவாசம் சோதிக்கப்படுகையில் நாம் கிறிஸ்துவுக்காக உறுதியாக நிற்கிறோமா? அப்படியானால் கர்த்தர் நம்மையும் கனம்பண்ணுவார்.

ஜெபம்: தேவனே, நீர் என் ஆத்துமாவை மீட்டுக்கொண்டீரே, என்னைக் காத்தும் வருகிறீரே! உமக்காகக் கடைசிவரை நான் வைராக்கியமாக நின்று  மற்றவர்களுக்கும் உதவி செய்யவும், உயிரே போனாலும் இயேசுவை விட்டுப் பின்வாங்கிவிடாமலிருக்கவும் கிருபை தாரும். ஆமென்.


தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page