top of page

புதன், ஜூன் 11 || எந்தக்காரியமானாலும் அவரை நம்புங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 11
  • 1 min read


... உன் நம்பிக்கை வீண்போகாது. - நீதிமொழிகள் 24:14

சிந்தியா எட்டுவயது சிறுமியாக  இருந்தபோது அவர்கள் குடும்பம் கனடா தேசத்திலுள்ள ஒரு அருமையான ஏரிக்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். ஒரு நாள் அவளது தகப்பன் காலை உணவுக்குமுன், மீன் பிடிப்பதற்காகக் ஏரிக்கு அவளை அழைத்துச் சென்றார். சிந்தியா மீனைப்பிடித்து தன் தாயாரிடம் கொடுத்து  சமைக்கச்சொல்ல விரும்பினாள்.  சில மணி நேரம் கடந்தும் அவர்களால் ஒரு மீனையும் பிடிக்கமுடியவில்லை. காலை உணவுக்கு மீன் கிடைக்காது போலிருக்கிறதே என்று எண்ணி சிந்தியா அழ ஆரம்பித்தாள். அழுகையை நிறுத்து, மகளே! ஏமாற்றங்களை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். இப்போது ஆண்டவரிடம் ஜெபி; அவர் உனக்காகவே ஒரு மீனை அனுப்பலாமே, யாருக்குத் தெரியும் என்றார். அவள் உடனே, ஆண்டவரே என்னை ஏமாற்றிவிடாதேயும் என்று ஊக்கமாக ஜெபித்தாள். சரியாக அதே நேரத்தில் ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு பெரிய மீன் துள்ளி அவர்களது படகுக்குள் வந்து சிந்தியாவின் காலுக்கருகில் விழுந்தது. அந்த அருமையான நிகழ்வு நமக்கு நம்பமுடியாததாகத் தோன்றினாலும், பின்னாட்களில் சிந்தியா எந்த சூழ்நிலையிலும் எந்த சிறிய காரியத்திற்கும்கூட தன் ஆண்டவரை நம்பக் கற்றுக்கொண்டாள். 


அன்பானவர்களே, ஏமாற்றங்கள் கர்த்தர் நமக்குத் தரும் சந்தர்ப்பங்கள். அவற்றிலிருந்து நாம் விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும், ஆவிக்குரிய வளர்ச்சி பெறவேண்டும் என்பதே அவரது விருப்பம். எனவே, நாம் ஏமாற்றங்களைச் சந்திக்க நேர்கையில், அவற்றை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இது சொல்வதற்கு சுலபம் என்றாலும் கைக்கொள்வதற்குக் கடினம்தான். எனினும், நாம் அப்படிச் செய்வோமானால் வளருவோம்; அவரை நம்பக் கற்றுக்கொள்ளுவோம். அவர் நமக்காக யாவையும் செய்துமுடிப்பார். அவர் ஒருபோதும் நம்மைத் துன்பப்படுத்த விரும்பமாட்டார். நம்மை ஆசீர்வதிக்கத்தான் அவர் விரும்புகிறார். எனவே, சோர்வுக்கு இடம் தராமல், ஏற்படும் ஏமாற்றமும் நமக்கு நன்மையே பயக்கும் என எதிர்பார்ப்போம். 

ஜெபம்: தேவனே, உமது பிள்ளைகளின் வாழ்வில் ஏமாற்றம் என்பது இல்லை, ஏனெனில் எல்லாமே உமது சித்தப்படிதான் அவர்கள் வாழ்வில் நடக்கிறது என நம்புகிறேன். உம்மை விசுவாசித்து, இனிவரும் நாட்களில் எனக்கு ஏமாற்றங்களை நன்மையாக மாறப்பண்ணுவீர் என நம்புகிறேன். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page