top of page

புதன், ஜூன் 04 || விசுவாசியின் வாழ்வில் எதுவும் தற்செயலாய் நடக்காது

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 4
  • 1 min read

வாசிக்க:  ரூத் 2: 1-4


... தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது. - ரூத் 2:3


ரூத் போவாசுடைய வயல்நிலத்தின் பகுதி ஒன்றில் வந்தாள் என ரூத் 2:3 கூறுகிறது. இது தானாகவே நடந்தது என நாம் கூறமுடியாது. தேவ கிரியையை அதிர்ஷ்டம் என்றோ தற்செயல் என்றோ கூறமுடியாது. மனுஷீகப் பார்வையிலே தற்செயலாகத் தெரிபவை, தேவனின் இறையாண்மையிலே, அவரே முழுக் கட்டுப்பாட்டையும் வைத்திருக்கிறார் என்பது தெரியும். அகராதி விளக்கப்படி, தற்செயல் என்பது இரு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் திட்டமிடாது நடைபெறுகின்றன; ஆனால் அவற்றிலே தொடர்பு இருப்பதுபோல் தோன்றுகிறது.  ஜார்ஜ் முல்லர், வேதாகமத்தில் காட்சிகள் எதுவும் தற்செயலாய் நடப்பதில்லை என்பதை இவ்வாறு கூறுகிறார்: காட்சிகளின் பின்னால் தேவன் இருக்கிறார், தம் கட்டுப்பாட்டுக்குள் அவைகளை  வைத்திருக்கிறார். ரூத் புத்தகத்தில் வரும் முதல் காட்சியில் இரண்டு தேவ கிரியைகளைக் காண்கிறோம் - ஒன்று, போவாஸின் வயல்நிலத்திற்கு ரூத் வருகிறாள், இரண்டு, போவாஸ் தன் வயல்நிலத்தில் ரூத்தைப் பார்க்கிறான்! 


அன்பானவர்களே, இவ்வுலகில் நாம் இருக்கும்போது, ஒரு மகிமையான காரியம் நடைபெறுகிறது ‡ நம் காலங்கள் தேவனுடைய கரத்திலிருக்கிறது; பிரபஞ்சத்தின் காரியங்களை அவரே கட்டளையிடுகிறார்; அவருடைய அனுமதியின்றி அவரது பிள்ளைகளுக்கு எதுவும் வருவதில்லை. பாதகமான காற்று வாழ்வில் வீசுகையில், இந்த சத்தியம் நம் ஆத்துமாவுக்குக் கீலேயாத்தின் பிசின்தைலம் போலிருக்கிறது! தேவனே இறையாண்மை உடையவர். அவர் தற்செயலாகச் செய்கிற தேவனல்ல. தேவனை அறிந்துகொள்ளவும், அவர் சித்தப்படி செய்யவும் விரும்புகின்ற உண்மையான விசுவாசி, தன்னைச் சுற்றி நிற்கும் சூழ்நிலைகள் சாத்தியக்கூறு விதிப்படி வருபவை அல்ல, தேவனுடைய சித்தம் மற்றும் நோக்கத்தின்படியே வருகின்றன என்பதை நன்கு அறிவான். தம்முடைய வாக்குத்தத்தத்துக்கு மாறாக தேவன் செயல்பட்டாலும் அவரை நிச்சயம் நாம் நம்பலாம் என்று ஊக்கமடைவோமாக. 

ஜெபம்:  ஆண்டவரே, ரூத் வாழ்வின் சம்பவங்கள், சூழ்நிலைகளைவிட நீர் பெரியவர் என்ற முழு நம்பிக்கையை எனக்கு தந்தபடியால், என் எதிர்காலத்தை நோக்கி நான் தைரியமாய் முன்னேறுவேன். என் வாழ்வில் தற்செயலாக எதுவும் நடக்காது; அனைத்தும் உமது கட்டுப்பாட்டிற்குள்தான் நடக்கும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page