top of page

திங்கள், மார்ச் 17 || விசுவாசப் போர்வீரரே, நீங்கள் முன்னேறுங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Mar 17
  • 1 min read

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; ...- 1 தீமோத்தேயு 6:12



விசுவாசப் போராட்டத்தைப் போராடுவதே மெய்யான கிறிஸ்தவம்! இந்தக் கிறிஸ்தவப் போராட்டம் உலகத்திலிருக்கிற சண்டைகளுக்கு முற்றிலும் வேறுபட்டது. இராணுவ வீரர்களின் எண்ணிக்கையிலோ, அவர்களது பலத்திலோ அது சார்வதில்லை. அது இம்மை வாழ்விற்குரிய ஆயுதங்களால் போரிடுவதல்ல, ஆவிக்குரிய ஆயுதங்கள் அதற்குத் தேவை. விசுவாசம் என்கின்ற கீலிலே போரின் வெற்றி சுழல்கிறது. போரில் நாம் வெற்றி பெற தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளவேண்டும். நம் வாழ்நாள் முடிகின்ற வரை கழற்றவே கூடாது. எந்தவொரு ஆயுதத்தையும் நாம் விட்டுவிடக்கூடாது. சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், விசுவாசமென்னும் கேடகம், தேவவசனமென்னும் ஆவியின் பட்டயம், இரட்சணியமென்னும் தலைச்சீரா - இவை ஒவ்வொன்றுமே மிகவும் தேவையானவை. வயது முதிர்ந்த ஊழியர் ஒருவர், பரலோகத்திலே நாம் ஆயுதந்தரித்தவர்களாய் இருக்கமாட்டோம்; ஏனெனில், அங்கே நாம் மகிமையின் ஆடையைத் தரித்தவர்களாயிருப்போம். ஆனால், இங்கேயோ நாம் நமது ஆயுதங்களை இரவுபகலாய்த் தரித்திருக்கவேண்டும். அவற்றை அணிந்துகொண்டுதான் நடக்க வேண்டும், பணியாற்ற வேண்டும், தூங்க வேண்டும், இல்லை எனில் நாம் கிறிஸ்துவின் உண்மையான போர்வீரர்கள் அல்ல என்று சொல்கிறார்.


அன்பானவர்களே, நமக்கு அன்பான நம் இரட்சகரின் கண்கள் காலையும், மதியமும், இரவும் நம் மேலே இருக்கின்றன.  நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாத வேதனை நமக்கு வர அவர் அனுமதிப்பதே இல்லை. அவரையே பிசாசு தாக்கினானே; ஆனபடியால் போராட்டங்கள், சோதனைகள் இன்னதென்று அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நமக்கு முன்சென்ற அநேகம் ஆயிரம் போர்வீரர்கள் நாம் சந்திக்கும் அதே போராட்டத்தைச் சந்தித்து போராடியிருக்கிறார்கள், அவர்களை நேசித்தவராலே முற்றிலும் ஜெயம்கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள. அந்த ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலே அவர்கள் முற்றிலும்ஜெயம் பெற்றார்கள் - நாமும்கூட அதுபோன்றே ஜெயம் பெறுவோம். எனவே, மனமுடைய வேண்டாம். கொஞ்ச காலம் மட்டுமே இந்தப் போராட்டம்; கடைசி எக்காளம் தொனிக்கும்போது, நம் ஆண்டவர் இயேசு வருவார். அப்போது நித்தியநித்தியமாகப் போராட்டத்தை விட்டுவிட்டு, அவருடன் சந்தோஷமாகச் சேர்ந்துகொள்வோம்!
ஜெபம்:  ஆண்டவரே, ஆவிக்குரிய போராட்டத்தில் கிரமமாகப் போராடுவதற்கு நான் உம்மில் நிலைத்திருக்க, நெருங்கி ஐக்கியப்பட, உறுதியுடன் பற்றிக்கொள்ள உதவினீர். நன்றிகள் பல. மேலும், ஆவிக்குரிய ஆயுதங்களை ஒன்றுவிடாமல் என் கடைசி மூச்சு வரை நான் தரித்துக்கொள்ளுவேன். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page