top of page

திங்கள், மார்ச் 03 || எதையும் செய்வதற்கு முன்பாக தேவனிடம் கேட்கவேண்டும்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Mar 3, 2025
  • 1 min read

தாவீது: நான் போ(கலாமா) ... என்று கர்த்தரிடத்தில் விசாரித்(தான்) - 1 சாமுவேல் 23:2


கேகிலா, யூதாவின் எல்லையருகே இருந்த பட்டணம்.  அது கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணம். பெலிஸ்தர் அதற்கு எதிராக வந்து களஞ்சியங்களைக் கொள்ளையிட்டனர். இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, தான் போய் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தான் தாவீது. ஆண்டவரும், நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து கேகிலாவை இரட்சிப்பாயாக என்று சொன்னார். ஆனால், தாவீதோடிருந்த 600 மனுஷர் பயப்பட்டார்கள். மனுஷீகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அவர்கள் மிகவும் பயந்ததற்கு காரணம் - அவர்கள் மிகவும் தேறின போர்வீரர்களல்ல. வேதவசனம் இப்படியாகக் கூறுகிறது: ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடு கூடிக்கொண்டார்கள்.  (1 சாமுவேல் 22:2) எதிரிக்குப் பயந்தவர்கள் போர்க்களத்துக்குள் நுழைந்தால் வெற்றிபெறுவது அரிது என்பது தாவீதுக்கு நன்றாய் தெரியும். எனவே, அவன் கர்த்தரிடத்தில் மீண்டும் ஒருமுறை விசாரித்தான். 1 சாமுவேல் 23:4ல், அவர்களைப் போகும்படி கட்டளையிட்டதுடன், அவர்கள் கையில் பெலிஸ்தரை ஒப்புக் கொடுப்பதாக வாக்குப்பண்ணினார். அவருக்குக் கீழ்ப்படிந்து, அந்த 600 பேருடன் சென்று பெலிஸ்தருடன் யுத்தம்பண்ணி, பராக்கிரமசாலிகள் அநேகரை வெட்டி வீழ்த்தி கேகிலாவை இரட்சித்தான். அவர்களுடைய கீழ்ப்படிதலும் விசுவாசமுமே அவர்களுக்குப் பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது! 


அன்பானவர்களே, ஒவ்வொரு நாளும் தான் எடுக்கின்ற முடிவுகளுக்குக் கர்த்தரின் வழிகாட்டுதலில் சார்ந்திருந்தான் தாவீது என்பதை இந்த வேதப்பகுதி விளக்குகிறது. நம்முடைய வாழ்வுக்கு ஜெபம் வழிகாட்டுகிறதா? அல்லது பிரச்சனை என்று வரும்போது அதுதான் நம் கடைசி முயற்சியாக இருக்கிறதா? நாம் முதலில் திட்டங்களைப் போட்டு, அதை ஆசீர்வதிக்க ஆண்டவரிடம் கேட்கும் பழக்கத்தில் விழுந்துவிடுகிறோம். எதுவுமே முடியவில்லை என்றபோது தேவனிடம் வருகிறோம். தேவை ஏற்படும் நேரத்தில் நாம் அவரிடத்தில் வருவதை தேவன் விரும்புகிறதில்லை. நாம் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, நம் வழிகளிலெல்லாம் அவரை நினைக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (நீதிமொழிகள் 3:5)      
ஜெபம்:  ஆண்டவரே, நான் அவசரமாக, என் விருப்பப்படி எந்தவொரு காரியமும் செய்யாமல், உமது சித்தத்தைத் தேடி, உமது வழிநடத்துதலைக் காண உதவும். என் சொந்த ஞானத்தின்படி செயல்படாமலிருக்க உதவும். அந்தக் காரியத்தில் உமது சித்தமிருக்கிறதா என்றறிந்து முடிவெடுக்க எனக்கு உதவும். ஆமென். 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page