top of page

திங்கள், ஜூன் 23 || இதயத்தில் பரிசுத்தம்! எண்ணத்தில் தூய்மை!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 23
  • 1 min read

வாசிக்க: மாற்கு 7: 1-15


போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.  - மத்தேயு 23: 26


மோசேயின் நாட்களில் இஸ்ரவேலர் கர்த்தருடைய சமுகத்திற்கு வருவதற்குமுன் தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்ட மோசேயைப் பணித்தபோது கர்த்தர், ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே ஒரு வெண்கலத்தொட்டியை வைத்து அதில் தண்ணீர் வார்க்கவும், வைக்கவும், கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் முன்பாக ஆசாரியர்கள் தங்களது கைகளையும் கால்களையும் கழுவவும் கட்டளையிட்டார். (யாத்திராகமம் 30:18,19) இப்படிப்பட்ட சடங்காச்சாரங்களை பரிசேயரும் வேதபாரகரும் ஆண்டவர் இயேசுவின் காலத்திலும் கடைப்பிடித்துவந்தார்கள். அது மட்டுமல்ல, சுத்தப்படுத்திக் கொள்ளுதலை அவர்கள் மிகவும் முக்கியப்படுத்தினபடியால், தாங்கள் சாப்பிடுவதற்குமுன் தங்கள் கைகளைச் சுத்திகரித்துக்கொள்வதில் கவனமாயிருந்தார்கள். எனவே, இயேசுவும் அவரது சீஷர்களும் கைகழுவாமல் சாப்பிட்டதைப் பார்த்து, அவர்களைக் குறைகூறினார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, புறம்பான சுத்திகரிப்பு எனும் பாரம்பரியத்தைவிட உள்ளான சுத்திகரிப்பான இருதய சுத்திகரிப்பு மிகவும் அவசியம் என்று உறுதியாகக் கூறினார். வாய்க்குள் போகிறது ஒரு மனிதனைத் தீட்டுப்படுத்துவதில்லை என்றும், அது ஆசனவாய் வழியாகக் கடந்துபோகிறது என்றும், இருதயத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஆம்! மனுஷனுடைய இருதயம் எல்லாவற்றைப் பார்க்கிலும் மகா கேடும் திருக்குள்ளதுமாயிருக்கிறது. அதிலிருந்து பொல்லாத சிந்தனை, விபச்சாரம், வேசித்தனம், இச்சை போன்ற அசுசிப்படுத்தும் காரியங்கள் புறப்படுகின்றன.  


அன்பானவர்களே, நம் இருதயங்களை இயேசுவின் இரத்தத்தால் மாத்திரமே பரிசுத்தப்படுத்திக்கொள்ளமுடியும். 

ஜெபம்: சர்வவல்ல தேவா, புறம்பான சுத்திகரிப்பு போன்ற பாரம்பரியங்களைக் கைக்கொள்வதினால் என் இதயத்தின் அசுசி நீங்காது என உணர்த்தினீர்.  இயேசுவின் இரத்தம் ஒன்றே என்னை உள்ளும் புறம்பும் சுத்திகரிக்கும் என்று உணர்ந்து அனுதினமும் என்னைச் சுத்திகரித்துக்கொள்ள உதவும். ஆமென்



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page