top of page

திங்கள், செப்டம்பர் 29 || கடுகு விதையளவு விசுவாசம்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Sep 29
  • 1 min read

தெளிதேன் துளிகள் வாசிக்க: மத்தேயு 17: 14-21


விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்.

- 1 கொரிந்தியர் 16:13


நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்துடன் அடியெடுத்து வைக்கும்போது அவரிடத்திலிருந்து நினைத்தும் பார்க்கமுடியாத பெரிய காரியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அப்படிச் செய்கையில், நாம் சில கடினமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரலாம். அப்போதெல்லாம் நாம் விசுவாசத்துடன் ஜெபிக்கவேண்டும். அப்போது நம் விசுவாசம் உறுதிப்படுகிறது. முதலாவது, ரோமர் 10:17, விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் என்கிறது. வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களை நாம் எடுத்து அவற்றை அறிக்கையிடும்போது, விசுவாசம் பெலப்படுகிறது; இரண்டாவதாக, நாம் ஜெபிக்கும்போது விசுவாசம் பெருகுகிறது. ஜெபமே நாம் தேவனோடுகூட தொடர்புகொள்ள, அவரைத் தேட உதவுகிறது. மத்தேயு 9:20 தொடங்கி, பன்னிரண்டு வருடமாகப் பெரும்பாடினால் அவதியுற்ற ஸ்திரீயின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நாம் வாசிக்கலாம். அவரது வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் தனக்கு சுகம் கிடைக்கும் என்பது அவளது விசுவாசம். எனவேதான் ஆண்டவர் அவளை நோக்கி, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று கூறினார். 22ம் வசனம், அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள் என்பதை உறுதிப்படுத்துகிறது. அல்லேலூயா!


மூன்றாவதாக, ஜெபிக்கும்போது நமது உள்ளத்தில் எழும்பும் எந்த சந்தேகத்தையும் நாம் அப்புறம் தள்ளிவிடவேண்டும். யாக்கோபு 1:6-8 வரையுள்ள வசனங்கள் சந்தேகத்துடன் நாம் கேட்டால் எதையும் நாம் பெறமுடியாது என்கிறது. எனவே, நம் விசுவாசத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, சந்தேகத்தை புறம்பே தள்ளிவிட்டு, அவரது கரத்தைப் பற்றிக்கொண்டு, ஜெபத்தினால் எதையாவது கேட்போமானால் நாம் அவரிடத்திலிருந்து நிச்சயம் பெற்றுக்கொள்ளமுடியும். 

  

ஜெபம்: தேவனே, கடுகுவிதையை நான் பார்க்கும்போதெல்லாம் விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி  நீர் கூறியதை நினைவுகூர கிருபைதாரும். வசனத்தின் ஆதாரத்தைக்கொண்டு விசுவாசத்துடன் ஜெபித்து, உம்மிடமிருந்து என் தேவைகளைப் பெற்றுக்கொள்ள எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page