top of page

திங்கள், அக்டோபர் 14 வாசிக்க: யாத்திராகமம் 12: 21-24

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Oct 14, 2024
  • 2 min read

ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் பாவ வல்லமையை முறிக்கும்


நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு.. கடந்துபோவேன்... - யாத்திராகமம் 12:13


கர்த்தர் இஸ்ரவேலருக்கு இட்ட கட்டளை: ஒருவன் தன் குடும்பத்துக்கு தக்கதாக வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த ஆட்டுக்குட்டியை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தங்கள் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கவேண்டும். அந்த இரத்தத்தைக் கண்டு சங்காரக்காரன் வீட்டைவிட்டுக் கடந்துபோவான்! எகிப்தின் முதற்பேற்றை அழிக்கும்போது, இஸ்ரவேலரை மட்டும் அது அணுகாது. கர்த்தர் பஸ்கா

ree

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின்மூலம் அவர்களை விடுவிப்பார். கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கும்போது இந்தச் செயல் நிறைவேறும். இதனை அறிவுபூர்வமாக நம்புவது மட்டும் போதாது. ஆட்டுக்குட்டியின் இரத்தம் தலைச்சன்களை மரணத்திலிருந்து பாதுகாக்கும் என்ற கர்த்தரின் வார்த்தையை ஒருவர் விசுவாசிக்க வேண்டும்; அந்த விசுவாசத்தினாலே, நிலைக்கால்களில் இரத்தத்தை அவர்கள் பூசவேண்டும். யாராவது இதை நம்பாமல், நிலைக்கால்களில் இரத்தத்தைத் தெளிப்பதினால் தலைப்பிள்ளைகள் காப்பாற்றப்படுவது எப்படி என்று கேட்டால் அவனது பிள்ளை சாகும். நான் விசுவாசிக்கிறேன் என்று வாயால் மட்டும் சொல்லி அந்த இரத்தத்தைத் தெளிக்காதிருந்தாலும் சங்காரக்காரனிடமிருந்து தப்ப முடியாது. கிறிஸ்துவின் இரத்தத்துக்கும் இந்த உண்மை பொருந்தும். 


அனபானவர்களே, நீங்கள் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் வளர்ந்திருக்கலாம், இயேசுவைப் பொதுவாக விசுவாசிக்கலாம், ஆனால், தனிப்பட்ட விதத்தில் சிலுவையண்டைக்கு ஓடாமல் போனால், கோபாக்கினையிலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் நீங்கள் தப்பமுடியாது. இன்றைக்கு ஒரு தீர்மானம் எடுங்கள்! நீங்கள் பாவி, கிறிஸ்து உங்களுக்குத் தேவை என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள். உங்களை நம்புவதை அல்லது உங்கள் நற்கிரியைகள்தான் இரட்சிப்புக்கான வழி என்று நம்புவதை விட்டுவிடுங்கள். கிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவத்துக்கான கிரயம் என்பதை நம்புங்கள். கிறிஸ்துவின் இரத்தத்தை உங்கள் இருதயத்திலே விசுவாசத்துடன் பூசுங்கள்; நிச்சயம் நீங்கள் தேவ கோபாக்கினையில் இருந்து தப்பிக்கொள்வீர்கள்.

ஜெபம்: ஆண்டவர் இயேசுவே, இஸ்ரவேல் எகிப்தைவிட்டு வெளியேறுவதை பஸ்கா முதன்மைப்படுத்தவில்லை. மாறாக, உம்மை உயர்த்த, மகிமைப்படுத்தவே இருக்கிறது. இயேசுவை நான் விசுவாசிக்கிறேன் என்று வாயால் மட்டும் கூறாமல், விசுவாசத்துடன் சிலுவையிடம் ஓடி, என் இருதயத்தில் இரத்தத்தைப் பூசுகிறேன். உம்மை என் ஆண்டவர், என் இரட்சகர் என்று அறிக்கையிடுகிறேன். ஆமென்.


அன்பானவர்களே


இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12  மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து,  இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம்.  நீங்கள் எந்த அரை மணி  நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும்.  நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான, 

சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்



Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page