top of page

திங்கள், அக்டோபர் 06 || சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Oct 6
  • 1 min read

தெளிதேன் துளிகள் வாசிக்க: சங்கீதம் 150: 1-6


கர்த்தர் பெரியவரும் .. புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. - சங்கீதம் 145:3



இந்த 150ம் சங்கீதம், சங்கீதப் புத்தகத்தை முடிக்கின்ற இறுதி சங்கீதம் - சகல சிருஷ்டியும் தங்கள் குரலை உயர்த்தி சர்வ வல்லவரைத் துதிக்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. கர்த்தரை நாம் அவரது பரிசுத்த ஸ்தலத்தில் துதிக்கவேண்டும்,  ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதிக்கவேண்டும், அவரது வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதிக்கவேண்டும், அவரின் மாட்சிமை பொருந்திய மகத்துவத்துக்காக அவரைத் துதிக்கவேண்டும் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். எல்லாவித கருவிகளும், சுவாசமுள்ள யாவும் ஒருங்கிணைந்து அவரைத் துதிக்கவேண்டும்.


அன்பானவர்களே, வீணை, சுரமண்டலம், தம்புரு, யாழ், குழல் அனைத்தையும் அவரைத் துதிக்கச் சொல்லி சங்கீதக்காரன் அழைப்பாரென்றால், இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்பெனும் ஈவைப் பெற்றுக்கொண்ட நாமும் இன்னும் அதிகமாக அவரைத் துதிக்க வேண்டாமா? ஒன்றை நினைவில் வையுங்கள் - ஆராதித்தல் என்பது மனநிலை, சூழ்நிலையைப் பற்றியதல்ல, அது என்றென்றும் மாறாத தேவனுடைய மகத்துவத்தைப் பற்றியது. மேலும், துதித்தல் என்பது ஒரு குறிப்பிட்ட இடம், நாள் அல்லது ஒரு கூட்டம் மக்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படுவதில்லை - அது கர்த்தருடைய மகத்துவத்தை அனுபவித்த அனைவருடைய தொடர்ச்சியான ஸ்தோத்திரங்களாக இருக்கிறது. 

 எபிரெயர் 13:15 கூறுவதுபோல, ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை நாம் இயேசுவின் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். துதியானது பிரச்சனைகளை நோக்குகின்ற நம் கண்களை தேவ மகத்துவத்துக்கு நேராய் ஏறெடுக்க வைத்து, அவர் பிரசன்னத்தினால் நம் இருதயங்களை ஸ்திரப்படுத்துகிறது. மெய்யான துதித்தல், வெறும் இசையாய் மட்டுமல்ல, அது நம் வாழ்வின் முறையாகவே இருக்கிறது. நம் ஜெபங்கள், நாம் செய்யும் அன்பின் காரியங்கள், நம் கீழ்ப்படிதல், நம் சோதனைகளிலும் நாம் தேவனைக் கனப்படுத்துவதைத் தெரிந்துகொள்வதில் அது வழிந்தோடுகிறது! இப்படி நாம் வாழும்போது, நம் வாழ்வே அவரது இசைக்குழுவின் கருவிகளாய் மாறுகிறது; நித்தியமான பரலோக பாடலுடன் ஒன்றாய்க் கலந்துவிடுகிறது. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக! (சங்கீதம் 150:6)

ஜெபம்: சர்வவல்லவரே, உம்மைத் துதிக்க என் இருதயத்தை உயர்த்துகிறேன். என் வாழ்வும், என் வார்த்தைகளும், என் செயல்களும் உம்முடைய மகத்துவம் மற்றும் அன்புக்கான  நன்றியறிதலை எதிரொலிக்கட்டும். என்னில் இருப்பவை யாவும் உம் நாமத்தைத் துதிக்கட்டும். எல்லா துதிக்கும் நீரே பாத்திரர். ஆமென்

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page