ஞாயிறு, செப்டம்பர் 28 || பணித்தளத்திலுள்ள மிஷினரிகளுக்காக ஜெபியுங்கள்!
- Honey Drops for Every Soul
- Sep 28
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: அப்போஸ்தலர் 4: 23-31
..தைரியமாய்.. சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி.. விண்ணப்பம்பண்ணுங்கள். - எபேசியர் 6:20
சுவிசேஷப்பணியில் ஈடுபட்டிருக்கும் எந்த ஒரு மிஷனரிக்கும், போதகருக்கும், சுவிசேஷகருக்கும் அதிகம் தேவைப்படுவது நமது ஊக்கமான ஜெபமே! இவர்களுக்காக நாம் ஜெபிப்பது எப்படி என்று வெஸ்லி என்ற ஊழியர் கூறுகிறார். முதலாவது, நாம் மிஷனரிகள் எதிர்ப்புகளைச் சந்தித்து, சவால்களை மேற்கொள்ள பெலப்படுத்தப்பட வேண்டும் என ஜெபிக்கவேண்டும். இரண்டாவதாக, கர்த்தர் வல்லமையாக இடைபட்டு பணித்தலங்களில் அதிசயங்கள் அற்புதங்களை நடப்பிக்க ஜெபிக்கவேண்டும். மூன்றாவதாக, மிஷனரிமார்கள் வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியம் செய்பவர்களாக வாழ ஆவியானவரின் வல்லமை அவர்களுக்கு கிடைக்க ஜெபிக்கவேண்டும். நான்காவதாக, அவர்களுக்கு ஒரு தெய்வீகப் பாதுகாப்பு உண்டாக ஜெபிக்கவேண்டும். ஏனெனில், கர்த்தர் பயன்படுத்துகிற மக்கள்மேல் சத்துரு எரிச்சலும் கோபமும் கொண்டு, எப்படியாவது ஊழியத்தைத் தடைசெய்யும்படி சாத்தான் சோர்வு, சோதனை, விபத்து, வியாதி என்று பலவிதங்களில் அவர்களுக்கெதிராக கிரியை செய்வான். எனவே, மிஷனரிகள் சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய விதத்திலும் காக்கப்பட ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் பயமின்றி திகிலின்றி அவர்கள் ஊழியம் செய்யமுடியும்.
அன்பானவர்களே, இனியும் ஆண்டவரே, என்னையும் எனது குடும்பத்தையும் ஆசீர்வதியும் என்ற ஜெபங்களையே செய்துகொண்டிராமல், மிகுந்த பாரத்துடன் மற்றவர்களுக்கு, விசேஷமாக தேவ ஊழியர்களுக்கு தினந்தோறும் ஜெபிப்போம். அப்பொழுது அவர்கள் மூலமாகப் பெரிய காரியங்களைச் செய்வார் தேவன்.
ஜெபம்: தேவனே, மிஷனரிகளை பிசாசின் அக்கினியாஸ்திரங்களுக்கு விலக்கிப் பாதுகாத்து, உமது வல்லமையை அவர்களுக்குத் தாரும். நீரே ஜீவனுள்ள தேவன் என்பதைக் காண்பிக்க அற்புதங்களை அவர்கள்மூலம் நடப்பியும். சோதனைகளுக்கு அவர்களை விலக்கி, உமக்காகப் பயன்படுத்தும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments