top of page

ஞாயிறு, செப்டம்பர் 21 || தாழ்மையுள்ளவர்களைக் கர்த்தர் கனப்படுத்துகிறார்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Sep 21
  • 1 min read


சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். - மத்தேயு 5:5


சாந்தமும், தாழ்மையுள்ளவர்களாய், மற்றவர்களைக் கனப்படுத்தி வாழும் கிறிஸ்தவர்களே சிறந்த கிறிஸ்தவர்கள். மிகவும் வசதியான பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ரிச்சர்ட். 1197ல் பிறந்த அவர், தன் தகப்பன் இறந்த பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஒரு போதகராக விரும்பி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்திற்குச் சென்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது பணப்பையை யாரோ களவாடிவிட்டதால் அங்கே வறுமையில் தன் படிப்பைத் தொடரவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ஒரே மேலே அணிகின்ற கோட்டை மூன்று மாணவர்கள் மாற்றி மாற்றி அணிந்துதான் வகுப்புக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனாலும் மாணவனாயிருந்த நாட்களில் அவரது தாழ்மையும் அடக்கமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தன் படிப்பை முடித்து சொந்த ஊருக்குத் திரும்பிய அவருக்கு, ஆர்ச் பிஷப் அவர்களுக்குச் செயலாளராகப் பணிபுரிய அழைப்பு வந்தது. ஆர்ச் பிஷப், ராபர்ட்டின் நடத்தையைக்கண்டு பின்னாட்களில் அவரை பிஷப்பாக நியமித்தார். தாழ்மை கொண்டுவந்த உயர்வைப் பார்த்தீர்களா!


அன்பானவர்களே, தன்னை ஒருபோதும் வெளிப்படுத்திக் கொள்ளாத தன்மையே தாழ்மை. நம்மைப்பற்றிக் குறைவாக எண்ணிக்கொள்வது அல்ல, நம்மைக்குறித்த எண்ணமே சற்றும் இல்லாமல் வாழ்வதுதான் தாழ்மை. தன் தாழ்மையைப்பற்றி எவன் ஒருவன் பேசத்தொடங்குகிறானோ அன்றே அவனது தாழ்மை மறைந்துவிடுகிறது என்றார் மூடி. மோசே பூமியிலுள்ள அனைவரிலும் சாந்தமுள்ளவனாயிருந்தான் என்று கூறுகிறது எண்ணாகமம் 12:3. பிலிப்பியர் 2:6 இயேசுவின் தாழ்மையை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. நாமும் நம் தேவனுக்கு முன்பாகவும், மற்ற மனுஷருக்கு முன்பாகவும் தாழ்மையுடனிருக்கக் கற்றுக்கொள்வோம். கர்த்தர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களையோ அவர் உயர்த்துகிறார். 

ஜெபம்: தேவனே, என் எண்ணம், சொல், செயல் எல்லாமே தாழ்மையை வெளிப்படுத்துகிறதாய் இருக்க விரும்புகிறேன். சாந்தம் என்னில் நிறைவாகக் காணப்படவும் வாஞ்சிக்கிறேன். சீஷரின் கால்களைக் கழுவிய ஆண்டவர் இயேசுவைப்போலத் தாழ்மையை வெளிப்படுத்த உமது கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page