top of page

சனி, மார்ச் 08 || *தேவன் எப்போதும் நம்மை விசாரிக்கிறார்; சந்தேகமில்லை!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Mar 8
  • 1 min read

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் -1பேதுரு 5:7


தேவன் நம்மை அதிகமாய் விசாரிக்கிறவராயிருப்பதால் அவர் நம்மைப் பாதுகாப்பார், எவ்விதத்திலும் வேதனை நம்மை தொடவிடமாட்டார். அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் - அவரில் முழு நம்பிக்கை வைத்தால், வேதனையிலிருந்து நம்மை முற்றிலும் விடுவிக்க எந்த அளவுக்கும் அவர் செல்வார் என்பதே. வேதம் நமக்கு மிகத் தெளிவாகச் சொல்வது என்னவென்றால், தம்முடைய பிள்ளைகள் பாடுபடுவதற்கு அவர் அனுமதிக்கிறார்; அதற்கு, தேவன் நம்மை விசாரிப்பதில்லை என்று அர்த்தமில்லை. தேவன் பவுலை விசாரித்தார். அவர் சிறையிலிருந்தபோது, பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்று சொன்னார் தேவன்! (அப்போஸ்தலர் 23:11) பவுல் அதை கேட்டதுமே, தன் எல்லாக் கவலைகளையும் ஆண்டவர்மீது வைத்திருப்பார். ஆனால் அவர் இரண்டு வருட கண்காணிப்பில் இருந்தார். அப்படியானால், இரண்டு வருடமும் தேவன் அவரை விசாரிக்கவில்லை என்று அர்த்தமா? இல்லை! ஊழியக்காரனின் ஜெபத்துக்குப் பதிலாக தம் சமாதானத்தைக் கொடுத்த தேவன், தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன் என்று பவுல் எழுத அனுமதித்தார். (பிலிப்பியர் 4:12) பத்மு தீவில் யோவான் வைக்கப்பட்டபோது, தேவன் அவரை விசாரித்தார். யாக்கோபு கொடுத்த சாட்சியின் நிமித்தம் ஏரோது அவனைச் சிரச்சேதம் செய்தபோதும் தேவன் அவரை விசாரிக்கிறவராயிருந்தார்! 


அன்பர்களே, நம் சௌகரிய சூழ்நிலையில் மட்டுமல்ல, அதையும் தாண்டி தேவன் நம்மை விசாரிக்கிறவராயிருக்கிறார். நமது ஆத்துமாக்களை விசாரிப்பவர் அவர்தான். நாம் பல இன்னல்களை, அவமதிப்புகளை, தனிமையை, சுகவீனங்களை சந்திக்கலாம்; ஆனால் இவற்றின் மத்தியிலும், சமாதானத்தையும் மனரம்மியத்தையும் நம்மால் அனுபவிக்கமுடியும்! நம்மை தேவன் விசாரிக்கிறார் என்பதன் விளைவே இந்த அனுபவம். எனவே, நாம் மனமடிவடையாமல், தேவன் நம்மோடு எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா நாட்களிலும் நம்மை விசாரிக்கிறவராயிருக்கிறார் என்கின்ற சத்தியத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம். என்ன நேர்ந்தாலும், அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.
ஜெபம்:  ஆண்டவரே, என் பாடுகளின் மத்தியிலும், நீர் என்னை விசாரிக்கிறவராக இருக்கிறீர் என்று நினைவூட்டினீர். நான் சோர்வடையாமல், கவலைக்கு இடம் கொடாமல், என் கவலைகளை உம் தோளில் ஒவ்வொன்றாய் வைக்கிறேன்.நீர் ஒருவரே தருகின்ற சமாதானம், திருப்தியை நான் அனுபவிக்க உதவும். ஆமென். 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page