top of page

சனி, ஜனவரி 11 || தெளிதேன் துளிகள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jan 11
  • 1 min read

வாசிக்க: எபேசியர் 3: 17-19


அழிவற்ற மெய்யான அன்பு!


தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை ... தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

- யோவான் 3:16


மெய்யான அன்பு தேவனுடைய இருதயத்தில்தான் இருக்கிறது என்ற மாபெரும் சத்தியத்தை இயேசு நிக்கொதேமுவுக்கு விளக்கிக்காண்பித்தார். மனிதனோடு உறவாட விரும்பி அவனைப் படைத்த தேவன் அவனும் தன்னை நேசிக்கவேண்டுமென விரும்பினார். ஆனால், மனிதன் பாவத்தில் விழுந்தபடியால் அவரைவிட்டுப் பிரிந்தான். ஆனால், அன்புள்ள தகப்பன் அவனைத் தன்னோடு ஒப்புரவாக்கிக்கொள்ள விரும்பினார். அவனது பாவங்களை மன்னித்து, ஆக்கினைத்தீர்ப்புக்கு விலக்கத் தீர்மானித்து, தாம் அதிகமாக நேசித்த தம்முடைய ஒரேபேறான குமாரனை அவனுக்காகக் கொடுத்தார்! இவ்வுலகத்தை நியாயந்தீர்க்கும்படிக்கு அவர் தமது குமாரனை அனுப்பாமல் இரட்சிக்கவே அனுப்பினார். (யோவான் 3:17) இயேசுவை சிலுவையிலே இரத்தஞ்சிந்தி மரிக்கக்கொடுத்து, அவரை விசுவாசிப்பவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தமது இரக்கத்தினால் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி செய்தார். இதுவே ஒப்பற்ற, அழிவற்ற, குறையாத மெய்யான அன்பு!

அன்பு நண்பரே, மற்றோர் அன்பு அற்றுப்போனாலும் தேவனது அன்பு ஒருக்காலும் ஒழியாது. அவரது அன்பை சந்தேகியாதிருங்கள். உங்கள் வாழ்வின் காரியங்கள் உங்களை அசைப்பதாக இருந்தாலும், அவற்றைப் பார்க்காமல் சிலுவையை நோக்கிப்பாருங்கள். அங்கே அவரது அன்பு விளங்கும். அவர் பட்ட பாடுகளைக்காட்டிலும் நமது பாடுகள் மிகக் குறைவானவையே. அவர் நம்மை நேசிப்பதால் நம்மைப் பாடுகளினின்று விடுதலையாக்கி இரட்சிப்பை நமக்குக் காண்பிப்பார். அவரது அன்பே நிரந்தரமான அன்பு!
ஜெபம்: தேவனே, மற்றவர்கள் செலுத்தும் அன்பு சமயத்துக்குத்தக்க மாறும் அன்பாயிருக்கிறது. ஆனால் உமது அன்போ நிலையான அன்பு; ஒழிந்துபோகாத நித்திய அன்பு. ஆண்டவர் இயேசு மரித்த சிலுவை அதை விளங்கப்பண்ணுகிறது. இவ்வன்பை ருசிக்க, உம்மை முழு மனதுடன் நேசிக்க கிருபை தாரும்.  ஆமென். 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page