top of page

சனி, ஏப்ரல் 26 || யெகோவா நிசி - கர்த்தர் என் ஜெயக்கொடியானவர்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Apr 26
  • 1 min read


நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். - எபேசியர் 6:11



நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், பல்வேறு அனுபவங்களைச் சந்திக்கிறோம். சில சமயங்களில் விசுவாசத்தோடு நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டவுடன் ஒரு அற்புதத்தைப் பெறுகிறோம். மற்ற சமயங்களில் ஆண்டவரது ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு முன்பதாக, பிசாசை எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது. இஸ்ரவேலரின் சிவந்த சமுத்திரத்தின் அனுபவத்தில், தங்களைத் தொடர்ந்துவந்த பார்வோனது ராணுவத்தைப் பார்த்தவுடன், தப்ப அவர்களுக்கு வழியே தெரியாததால்  கதிகலங்கினார்கள். அப்போது அவர்களிடம் யுத்தம் செய்யும்படி மோசே கூறாமல், நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் என்று சொன்னான். (யாத்திராகமம் 14:13) அங்கே கர்த்தர் தமது ஜனத்திற்காக யுத்தம் செய்தார். சிவந்த சமுத்திரத்தைக் கடந்து ரெவிதீமிக்கு அவர்கள் வந்தபோது, தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் கதறியபோது கன்மலையைப் பிளந்து வனாந்தரத்தில் தண்ணீர் அருளினார் அவர். ஆனால் தொடர்ந்து அவர்கள் அமலேக்கியரோடு யுத்தம் செய்யவேண்டியிருந்தது. (யாத்திராகமம் 17:8) இப்போது நின்றுகொண்டு வெற்றிபெற கட்டளை வரவில்லை. ரெவிதீமில் இஸ்ரவேலர் வெற்றிபெற யுத்தம் பண்ணவேண்டியிருந்தது. (வசனம் 9)     


சிவந்த சமுத்திர அனுபவம் என்பது நமது இரட்சிப்பின் அனுபவத்திற்கு ஒத்ததாயிருக்கிறது. இரட்சிப்பு கிரியைகளினாலல்ல, கிருபையினால் உண்டாகிறது. நாம் எதையாவது செய்து இரட்சிப்பைச் சம்பாதிக்கவேண்டியதில்லை. அவரிடம் நாம் கேட்கும்போது ஆண்டவர் இயேசு நம் உள்ளத்தில் வந்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை இரட்சிக்கிறார். அவ்வளவு எளிதாய் நாம் இரட்சிக்கப்படுகிறோம். ஆனால் இந்தப் புதிய வாழ்விற்கு வந்தபிறகு, நாம் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடவேண்டியது அவசியம். நாம் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டு பிசாசிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், அவனை எதிர்த்துப் போராடி வெற்றி பெறவும் தயாராகவேண்டும். யேகோவா நிசி நமக்கு வெற்றியைத் தருவார். இது நிச்சயம்.


ஜெபம்: பிதாவே, என் ஆவிக்குரிய வாழ்வில் நான் சந்திக்கும் அனுபவங்களில் சிலசமயங்களில் நான் பிசாசை எளிதாக ஜெயம்கொண்டாலும், சில வேளைகளில் மிக உக்கிரமான யுத்தத்திலும் ஈடுபடவேண்டியிருக்கிறது. ஆனாலும் நீர் என் ஜெயக்கொடியாக இருப்பதற்காக உமக்கு நன்றி. ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page