top of page

செவ்வாய், நவம்பர் 19 || தெளிதேன் துளிகள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Nov 19, 2024
  • 1 min read

வாசிக்க:  ஏசாயா 54: 1-5


பாவமானது அவமானமும் இழுக்கும் விளைவிக்கும்!


... என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

- ஏசாயா 45:17


கர்த்தருக்கு எதிராகவும் மனுஷருக்கு எதிராகவும் பாவம் செய்யும்போது இழுக்கும், அவமானமும், நிந்தையும் ஒரு மனிதனை வந்து சேரும். ஆதாம் ஏவாள் பாவத்தில் விழுந்தபோது அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரைச் சந்திக்க வெட்கப்பட்டிருந்தார்கள். அதனால் மரங்களுக்கு நடுவே தங்களை ஒளித்துக்கொண்டார்கள். (ஆதியாகமம் 3:8)


  அன்பானவர்களே, சாத்தான் நம்மைச் சோதிக்கும்போது நாம் அதில் வீழ்ந்து கர்த்தருக்கு எதிராக பாவம் செய்துவிடாமல் இருக்கக் கவனமாயிருப்போம். மாறாக, ஆண்டவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரது வழியில் நடப்போம். யோவேல் 2:26ல், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். நாம் அவரது பிள்ளைகளாய் இருக்கையில், தவறாகக் குற்றம் சாட்டப்படும்போது அவர் நமக்காக யுத்தம் செய்து நமது நீதியை நிலைநாட்டுகிறார். நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டு, அவரது முகத்தைத் தேடி நம்மை அவர் சமுகத்தில் தாழ்த்தினால் அவர் நம் பாவங்களை நமக்கு மன்னித்து, நம் முகங்கள் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்வார். இரண்டாவதாக, அவரை நம்புகிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று சங்கீதம் 22:5ல் கூறப்பட்டிருக்கிறது. ஆபிரகாம், தன் குழந்தைக்காக இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்க நேரிட்டது. அவன் சரீரம் செத்துப்போயிருந்தது. ஆனாலும் தன் விசுவாசத்தில் அவன் குறைவுபடவில்லை. கர்த்தர் தாம் வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் என்று முழுநிச்சயமாய் நம்பினான். (ரோமர் 4:20,21) கர்த்தர் அவனுக்கு ஈசாக்கைக் வெகுமதியாக கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். மூன்றாவதாக, நாம் கர்த்தரை நோக்கிப்பார்க்கும்போது வெட்கப்படமாட்டோம். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை என்று சங்கீதம் 34:5ல் கூறப்பட்டிருக்கிறது. நான்காவதாக, அவருக்காக நாம் காத்திருக்கையில் நாம் வெட்கமடைவதில்லை. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் என்று ஏசாயா 40:31ல் வாசிக்கிறோம். எனவே, நாம் அச்சுறுத்தல்களையும், எதிர்ப்பையும் சந்திக்கும்போது, நாம் கர்த்தரை நம்புவோம், அவரைத் தேடுவோம், அவருக்காகக் காத்திருப்போம். கர்த்தர் நம்மை ஒருபோதும் வெட்கப்படுத்த விடமாட்டார்.


ஜெபம்: கர்த்தாவே, உமது வழிகளைவிட்டு விலகாமல் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் கிருபை தாரும். உம்மை நம்பி ஜீவிக்கவும், உமக்குமுன்பாகத் தாழ்மைப்படவும், உமக்காகக் காத்திருக்கவும் கிருபை தாரும். என் முகத்தை வெட்கப்பட்டுப்போகவிடாமல் பிரகாசிக்கப்பண்ணும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page