செவ்வாய், ஜூன் 17 || கழுகிடம் கற்றுக்கொள்ளுங்கள்!
- Honey Drops for Every Soul

- Jun 17
- 1 min read
வாசிக்க: உபாகமம் 32: 11,12
... நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை.. சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
- யாத்திராகமம் 19:4
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட விதம் மற்றும் அவர்கள் ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி அடைகிறவிதம் ஆகிய இரண்டிலும் கழுகானது இஸ்ரவேல் மக்களோடு ஒப்பிடப்பட்டிருப்பதை நாம் வேதத்தில் காண்கிறோம். இன்றைய வசனத்தில், கர்த்தர் தமது ஜனங்களாகிய இஸ்ரவேலரை ஒரு கழுகு தனது செட்டைகளின்மேல் தன் குஞ்சுகளைச் சுமந்துகொள்வதைப்போல சுமந்ததை வாசிக்கிறோம். உபாகமம் 32:11,12ல், கழுகு தன் கூட்டைக் கலைத்து தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து அவைகளை ஏந்திக்கொள்வதுபோல அவர்களது வனாந்திரப்பயணம் முழுவதும் அவர் செய்துவந்ததை வாசிக்கிறோம். இப்படிப்பட்ட செய்கைகளினால் நமது ஆவிக்குரிய வாழ்விற்குக் கழுகுகள் கற்றுத்தருவதுதான் என்ன?
விடுதலையின் பரிமாணத்தை இந்தக் கழுகுகள் நமக்கு விளக்குகின்றன;
முதலில் கூட்டிலிருந்து விடுதலை, கடுங்காற்றில் பறக்கையில் விடுதலை, தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள விடுதலை ஆகிய முப்பரிமாணத்தை விளக்குகின்றன.
ஒரு விசுவாசியின் வாழ்விலும் பாவத்திலிருந்து விடுதலை, (இது இயேசுவின் இரத்தத்தால் உண்டாகிறது) இரண்டாவது ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சி பெறுவதற்குத் தேவையான விடுதலை, மூன்றாவதாக, கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்ற விடுதலை (இது அவருக்கு ஊழியம் செய்வதைக் குறிக்கிறது) என்று கூறுகிறார் வாரன் வியர்ஸ்பி.
அன்பானவர்களே, கர்த்தர் நம் பாவங்களிலிருந்து அளிக்கும் விடுதலையோடுகூட நாம் நின்றுவிடக்கூடாது. அவர் நமது எல்லைகளை விரிவாக்கித்தரும்படி நம்மை அவரது கரங்களில் ஒப்படைத்து அவர் நம்மைப் பழக்குவிக்க அனுமதிக்கவேண்டும். ஜெபம்: தேவனே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் விடுதலையை நான் அனுபவிப்பதோடு, எனது எல்லைகளை நீர் விரிவாக்க என் வாழ்வை உம்மிடம் ஒப்புக்கொடுக்க உதவி செய்யும். இரட்சிப்பின் அனுபவத்தோடு நின்றுவிடாமல் ஆவிக்குரிய முதிர்ச்சி அடையும்படி என்னை நடத்தும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments