top of page

செவ்வாய், ஜூன் 10 || கர்த்தரின் பூரணமான அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 10
  • 1 min read

வாசிக்க:  1 யோவான் 3:1,2


... என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் ... - யோவான் 17:23

நாம் கர்த்தரால் நேசிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல என்ற எண்ணத்தை நம் உள்ளங்களில் பிசாசு விதைக்கிறான். நாம் சரியாக உபவாசிப்பதில்லை, சரியாக ஜெபிப்பதில்லை, சரியாக வேதம் வாசிப்பதில்லை, எனவே அவர் நம்மை நேசிக்கமாட்டார் என்ற தவறான எண்ணத்தை அவன் நமக்குள் தூண்டிவிடுகிறான். இவற்றையெல்லாம் நாம் செய்தால்தான் அவர் நம்மை நேசிப்பார் என்பதல்ல, அவர் நம்மை நேசிப்பதாலும், நாம் அவரை நேசிப்பதாலுமே இவற்றை நாம் செய்கிறோம்! நாம் இருக்கிறவண்ணமாகவே அவர் நம்மை நேசிக்கிறார். ஆகவேதான் நாம் பாவிகளாயிருக்கையிலேயே கிறிஸ்து நமக்காக மரித்தார். (ரோமர் 5:8) அவரை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது நாம் தேவகுடும்பத்தில் சேர்க்கப்படுகிறோம். கர்த்தரை, அப்பா பிதாவே எனக் கூப்பிடும் புத்திர சுவீகாரத்தின் ஆவியைப் பெறுகிறோம். 


இநத பரம தகப்பனின் அன்பு நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. எரேமியா 31:3, அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்.. என்று அவர் கூறுகிறார். ஏசாயா 54:10, மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறுகிறது. இதை நாம் உணர்ந்து விசுவாசிக்கவேண்டுமானால் அவரது ஆவியானவர் நம்மை நிரப்பவேண்டுவது அவசியம். அப்போதுதான் நாம் நமது உள்ளான மனிதனில் பெலப்படமுடியும். அப்போதுதான் அவரது அன்பின் அகலம், ஆழம், நீளம், உயரம் இன்னதென்று அறிந்துகொள்ளமுடியும். உலக அன்பானது,  ஏமாற்றத்தையே தரும்; மேலும் சுய பரிதாபத்திற்கும் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கும். வஞ்சிக்கப்படாதிருப்போம். எங்கே நாம் இருந்தாலும், தேவ அன்பே பூரணமானது. நம்மைப் பாதுகாக்கும் அந்த அன்பையே நாடுவோம். ஏற்றுக்கொள்வோம். 

ஜெபம்: தேவனே, உமது குமாரன் இயேசுவை நேசிப்பதைப்போல நீர் என்னையும் நேசிக்கிறீர். உமது அன்பிற்கு எவ்வளவேனும் நான் பாத்திரனல்ல. ஆனாலும் நான் உமது நிபந்தனையற்ற அன்பை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நானும் உம்மை அப்படி நேசிக்க கிருபை தாரும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page