top of page

செவ்வாய், ஜூன் 03 || பஸ்கா ஆட்டுக்குட்டியே, என் பிள்ளையை மீட்டுக்கொள்ளும்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jun 3
  • 1 min read

வாசிக்க:  மத்தேயு 20: 1-16


சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? - மத்தேயு 20:13


அந்த திராட்சத்தோட்டத்துக்கு எஜமான், ஆண்டவரைத்  தெளிவாய்க் காட்டுகிறான்; திராட்சத்தோட்டமோ அவரது ராஜ்யத்தைக் காட்டுகிறது. எஜமான் தனக்குப் பணிசெய்ய சில வேலையாட்களைக் கூலிபொருத்த விரும்பி, கடைதெருவுக்குச் சென்றான். இந்த உவமையில், எஜமான் கடைத்தெருவுக்குப் பலமுறை சென்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒருவேளை நாள் முடியப்போகும் வேளையிலும் பணி இன்னும் முடியாதிருந்த காரணத்தால் அவன் அப்படிப் போயிருக்கலாம். சாயங்கால வேளையில், பிந்திவந்தவர்களுக்கு, அவர்கள் ஓரிரு மணிநேரம் பணி செய்தும்கூட அவர்களுக்கு எஜமான் முழுநாளின் கூலியைக் கொடுத்தான். அவர்களைவிடத் தாங்கள் முழுநாளும் வேலை செய்ததால் தங்களுக்கு அதிகக் கூலி கிடைக்கும் என்று மற்ற வேலையாட்கள் நினைத்தனர். ஆனால் அப்படி அவர்கள் நினைத்தது தவறு, ஏனெனில் அவர்களும் அதையே -  அதாவது முழுநாளின் கூலியைப் பெற்றனர். தோட்டக்காரரிடம் அவர் செய்தது நியாயமில்லை என்று குற்றஞ்சாட்டியிருப்பார்கள் என்பது தெளிவாகிறது. அவரோ, அவர்கள் ஏற்றுக்கொண்ட, தான் வாக்களித்த கூலியை அவர்களுக்குக் கொடுத்தபடியால், அவர்கள் குறைசொல்வதற்கான காரணம் ஏதுமில்லை என்று கூறினார். அவர் தோட்டத்துக்குச் சொந்தக்காரரானதால், தான் நினைத்தபடி மற்ற வேலையாட்களுக்குக் கொடுக்கும் உரிமை அவருக்கு இருந்தது.


அன்பானவர்களே, தேவனுடைய ராஜ்யத்திலும், அவர் முழு அதிகாரத்தையும் உடையவராயிருப்பதால், தம்முடைய ஊழியர்களை தமக்குப் பிரியமானபடி நடத்துவார். அவர்கள் செய்யும் பணிக்குத் தாம் என்ன தரவேண்டும் என்றும், அவர்களது உண்மைத்துவத்துக்குத் தக்க பலன் இன்னதென்றும் அவரே முடிவெடுப்பார். எனவே அவருடைய ஊழியர்களான நாம் அவர் தருவதிலே சந்தோஷமடையவேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு அவர் தருவதிலே நம் கவனத்தைச் செலுத்துவது கூடாது. கிருபையின் ஆண்டவரிடத்திலிருந்து நமக்கு வருகின்ற சந்தர்ப்பமும், அவர் தரும் பலனும் நிச்சயம் அதிகமாகவே இருக்கும் என்பதில் நாம் உறுதியுடன் நம்பலாம். 

ஜெபம்:  ஆண்டவரே, உமது திராட்சத்தோட்டத்தில் வேலைசெய்ய எனக்குத் தந்த வாய்ப்புக்காக உமக்கு நன்றி. உம் சேவை செய்ய என்னைத் தெரிந்துகொண்ட தயவுக்காக நன்றியோடிருந்து, மற்ற வேலையாட்களோடு என்னை ஒப்பிட்டு, அவர்களுக்கு கிடைத்த பலனைக்குறித்து குறைசொல்லாதிருப்பேன். கிருபையுள்ள நீர் என்னையும் நிச்சயம் அதிகம் ஆசீர்வதிப்பீர். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page