top of page

செவ்வாய், ஏப்ரல் 08 || தேவ வார்த்தை, நம் ஆத்துமாவுக்கு உணவு

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Apr 8
  • 1 min read



வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; ... - 2 தீமோத்தேயு 3:16


தான் உயிர் வாழ்வதற்கு, வலிமை, வீரியம் பெறுவதற்கு எப்படி ஒருவர் உணவை உட்கொள்ளுகிறாரோ, அப்படியே ஒரு விசுவாசி ஆவிக்குரிய வாழ்வில் பெலம், ஆரோக்கியம் பெறுவதற்கு தேவ வார்த்தையைத் தியானிப்பது மிக அவசியம். ஒழுங்கான உணவின்றி ஒருவர் பெலவீனப்பட்டு, சுகவீனம் அடைவது போல, ஒரு கிறிஸ்தவனும் ஒழுங்கான ஆவிக்குரிய உணவு இல்லாவிட்டால், ஆவிக்குரிய வாழ்வில் பெலவீனமாகி இளைத்துப்போவான். கிறிஸ்தவர்களாகிய நாம் தனிப்பட்ட விதத்தில் தியான நேரத்துக்கும், வேத வாசிப்புக்கும் நேரம் தரவேண்டும். வேதத்தை வாசிப்பதற்கு நாம் குறிப்பிட்ட நேரம் கொடுக்கலாம், தினசரி வேதவாசிப்பைவிட வேத தியானத்துக்கு தனிப்பட்ட நேரத்தைக் கொடுக்கவேண்டும்; அப்போது நாம் வேதத்தை வாசிப்பதோடு, வசனங்களைத் தியானிப்போம்.


ஒரு பயனுள்ள தியான நேரத்தை எடுப்பதற்கான முதல் தேவை - தேவன் நம்மோடு அவர் வார்த்தையால் பேசும்படிக்கு நம்மை முழுதும் அவரிடம் சமர்ப்பிப்பதுதான்! நம்மைத் தடுக்கும் மற்றக் காரியங்கள் அனைத்தையும் நாம் நிறுத்துவதே அது! தேவனை முகமுகமாய் சந்திக்கும் விருப்பம் நமக்கு வேண்டும். நமது உள்ளம் அந்த நாளினுடைய வேலை மற்றும் பிரச்சனைகளால் நிரம்புவதற்கு முன்பாக காலைவேளையிலே உலகக் காரியங்களை நாம் நிறுத்திவிடுவது அவசியம். இப்படி நாம் தேவனிடத்தில் நம்மைச் சமர்ப்பிக்கும்போது, வேதத்தின் ஆழமான சத்தியங்களால் பிரகாசிப்பிக்கப்படும்படி பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களையும் கண்களையும் திறப்பார். எனவே அன்பானவர்களே,   இஸ்ரவேலர் எப்படி அதிகாலையில்  மன்னாவை சேகரித்தார்களோ (யாத்திராகமம் 16:17)  அப்படியே நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனுடைய மகிமையைக் காணும்படி, அதிகாலை வேளையிலேயே அவரது வார்த்தையில் அவரை நாம் தேடுவோம். அப்போது, அனுதினமும் வருகின்ற சவால்களைச் சந்தித்து மேற்கொள்ளும் வல்லமையைப் பெற்று, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை நம்மால் வாழமுடியும்! 
ஜெபம்:  ஆண்டவரே, பொதுவான வேத வாசிப்போடு நான் திருப்தியடையாமல், தனிப்பட்ட தியான நேரத்தை அனுதினமும் தர எனக்கு உதவும். அதிகாலையில் உலகத்தை விட்டு, உமது பிரசன்னத்தில் வருவதற்கு உதவும். என்னை முழுதும் சமர்ப்பித்து, வசனத்தின்மூலம் முகமுகமாய் உம்மைக் காண உதவும். ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page