top of page

செவ்வாய், ஆகஸ்ட் 19 || உமது அபிஷேகத்திற்காக தாகமாயிருக்கிறேன்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 19
  • 1 min read


நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். - மத்தேயு 5: 6


தனது தாயார் எப்படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார் என்பதைக் குறித்து வெஸ்லி டூயல் பின்வருமாறு எழுதுகிறார். என் தாயார் தன் சிறுவயதிலேயே இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். வாய்விட்டு ஜெபிக்கக்கூட தைரியமில்லாததால் தன் இருதயத்திலிருந்து ஜெபித்து இரக்கம் பெற்றார்கள். இரட்சிப்பின் நிச்சயம் அவர்களுக்கு இருந்தது. ஆயினும், தனக்கு ஒரு ஆவிக்குரிய தேவை இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். தனது பதினைந்தாவது வயதில் ஒரு வீட்டில் வேலைக்காக சேர்ந்த அவர்கள், ஒரு நாள், நீ இன்னும் எனது ஆவியால் நிரப்பப்படவில்லை என்று கூறிய ஆண்டவரது குரலைத் தன் செவிகளால் கேட்டார்கள். அன்றிலிருந்து தன்னை நிரப்புமாறு இரவும் பகலும் இடைவிடாமல் ஜெபித்தார்கள். ஒருநாள் காலை, மற்றவர்கள் விழிப்பதற்கு முன்பாகவே விழித்து, அடுப்பில் கணப்பை மூட்டிய அவர்கள், ஆண்டவர் இயேசுவே என் உள்ளத்திற்குள் வாரும். உமக்காக இடத்தை வைத்திருக்கிறேன் என்று கதறி ஜெபித்தார்கள். உடனே, வானத்திலிருந்து அக்கினி தன் இருதயத்தில் விழுந்ததுபோல உணர்ந்த அவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தார்கள். தனது வாழ்வில் அதுவரை அவர்கள் ஆவியின் நிரப்புதலைக்குறித்த சாட்சியையோ அல்லது பிரசங்கத்தையோ கேட்டதில்லை என்றாலும் அவர்களது வாஞ்சையை அறிந்திருந்த வல்லமையின் தேவன் அவர்களைத் தமது ஆவியால் நிரப்பினார்.

 

அன்பானவர்களே, நாம் ஆவியானவரால் நிரப்பப்பட விரும்பினால் நமக்கு தேவையானது, அவரால் நிரப்பப்படவேண்டும் என்ற தாகமும், இடைவிடாத ஜெபமுமே. அப்படி செய்வோமானால் ஆவியின் நிறைவை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்ளலாம்.

ஜெபம்: தேவனே, நான் உமது ஆவியானவரால் முற்றிலுமாக நிரப்பப்பட வாஞ்சிக்கிறேன். என்னை நிரப்பும். என் கெட்ட குணங்களையெல்லாம் மாற்றும். உமக்காக நான் இன்னும் அதிகமாகப் பயன்படும்படி என்னை உருவாக்கும். எனது வாழ்க்கையில் உமது ஆவியின் அனலை மூட்டிவிடும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page