top of page

வெள்ளி, ஆகஸ்ட் 29 || நமது சுயநீதி அழுக்கான கந்தையைப் போலிருக்கிறது!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 29, 2025
  • 1 min read


தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு. - நீதிமொழிகள் 30:12


சவுல் ஒரு வைராக்கியமுள்ள யூதன். விசுவாசிகளைத் துன்புறுத்தி சபைகளைப் பாழாக்குவதுதான் தான் கர்த்தருக்கு செய்யும் ஊழியம் என அவன் நினைத்தான். தன் மனச்சாட்சியின்படி தன்னை நீதிமானாகக் கருதினான். மேசியாவைக்குறித்தும் அவர் வருகையைக்குறித்தும் அறிந்திருந்தும், இயேசுவை மேசியாவாகப் பார்க்காமல், சிலுவையில் அறையப்பட்டு மரித்த குற்றவாளியாகவே பார்த்தான். எனவே அவரது சீஷர்கள் அவரே கிறிஸ்து எனப் பிரசங்கித்தபோது அவன் வெகுண்டெழுந்தான். அவர்கள் கர்த்தருக்கெதிராகச் செயல்படும் கள்ளப்போதகர்கள் என்று நினைத்தான். எனவே, அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அதற்காக அவன் தமஸ்குவிற்குச் சென்றுகொண்டிருந்தபோதுதான், நசரேயனாகிய இயேசுவே அவனுக்குத் தரிசனமானார். சவுலே நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்று தம்மை வெளிப்படுத்தினார். சவுலுக்கு அதிர்ச்சி! தான் கடவுளுக்கு ஊழியம் செய்துகொண்டிருப்பதாக அவன் நினைத்திருக்க, உண்மையில் மேசியாவையே துன்பப்படுத்திக்கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். உடனே தன்னைத் தாழ்த்தி, மனந்திரும்பி, ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டு தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்தான். ஆம்! கர்த்தருடைய பரிசுத்த பிரசன்னத்தில், தனது சுயநீதியெல்லாம் பவுலுக்கு அழுக்கான கந்தையைப்போலத் தோன்றியது. அன்பானவர்களே, தன் சுயநீதியைவிட்டு பவுல் மாறியபோதுதான் கர்த்தரால் அவனைப் பயன்படுத்தமுடிந்தது.


அன்பான நண்பர்களே, ஒழுங்காக சபைக்குச் செல்கிறோம்; தசமபாகம் தவறாமல் கொடுக்கிறோம்; தினமும் வேதம் வாசிக்கிறோம்; ஜெபிக்கவும் செய்கிறோம். எங்களில் என்ன குறை இருக்கிறது என்று தங்கள் செய்கைகளால் தங்களை நீதிமான்களாக்கிக்கொள்ளும் கூட்டம் இன்று பெருகியிருக்கின்றது. இப்படிப்பட்ட காரியங்களும் சடங்குகளாக மாறிவிட்டபடியால் உள்ளான மனந்திரும்புதலுக்கு இடமில்லாமல் போய்விட்டது. நமக்கும் கர்த்தரோடு ஒரு நேரடி சந்திப்பு நிகழும்போதுதான் நம் நிலை உணர்ந்து மனந்திரும்புவோம். அப்போதுதான் நமக்குள் மாற்றம் நிகழும் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அவரும் நம்மைப் பயன்படுத்துவார்.

ஜெபம்: தேவனே, மதவாதம் மற்றும் சடங்காச்சாரங்களால் பெருமைகொண்டு, இறுகிப்போன மனதுடையவனாக நான் வாழ்கிறேன் என உணர்த்தப்பட்டேன். என் சுயநீதியை நம்பிய என்னை மன்னியும். என்னைத் தாழ்த்தி மனந்திரும்ப உதவி செய்யும். என்னையும் மாற்றி உமக்கென்று பயன்படுத்தும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page