top of page

வியாழன், ஆகஸ்ட் 21 || உங்களிடமுள்ள ஆகானை அகற்றிப்போடுங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 21, 2025
  • 1 min read

வாசிக்க: யோசுவா 7: 2-13


எழுந்திரு... உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்...  

- யோசுவா 7:13



கர்த்தர் இன்றும் எழுப்புதலை அனுப்ப தயாராகவே உள்ளார். ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள நாம் தயாராயில்லை என்பதாலேயே எழுப்புதல் தாமதிக்கிறது. நமது பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிட்டாலேயொழிய, நாம் எத்தனைமுறை பிரசங்கம் பண்ணினாலும், எவ்ளவுதான் ஜெபம் பண்ணினாலும் எழுப்புதல் வரமுடியாது.


யோசுவா 7: 7ல், ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர் என்று யோசுவா கேட்டான். ஆனால் 10ம் வசனத்தில், முகங்குப்புற விழுந்துகிடந்த யோசுவாவை கர்த்தர் நோக்கி, எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள் என்று கடிந்துகொள்ளுவதை வாசிக்கிறோம். 

  

நண்பர்களே, நாமும் நீண்டநாட்களாக எழுப்புதலுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கலாம். பதில் கிடைக்காமல் நாமும் கர்த்தரை கேள்வி கேட்டுக்கொண்டிருக்கலாம். ஆயியின் தோல்வி ஆகானின் பாவத்தின் விளைவே! தீட்டான அந்தக் காரியங்கள் அகற்றப்பட்டு எரிக்கப்பட்டபிறகுதான் ஆயி இஸ்ரவேலர் வசமாயிற்று. இன்று நாம் மேற்கொள்ளமுடியாத எதிரிகள் நமக்கு இருந்தால் நம்மை நாமே சற்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. நம்மில் இருக்கும் பாவத்தை களைந்துபோட்டு, மனந்திரும்பி ஆண்டவரிடத்தில் மன்னிப்பு பெற்றபிறகுதான் நம் ஜெபத்திற்கு பதில் பெற்றுக்கொள்ளமுடியும்.  இன்று நம்மிடம் காணப்படும் ஆகான் எது? பெருமையா? பரிசுத்தமின்மையா? இச்சையா? அப்படியாயின் பொன் கன்றுக்குட்டிகளைப்போலிருக்கும் இவற்றை உடனே நொறுக்கி பொடிசெய்து தூற்றிவிடவேண்டும் என்று ஜேம்ஸ் ஏ ஸ்டீவர்ட் கூறுகிறார். எனவே, நம்மிடமுள்ள பாவங்களை அறிக்கைசெய்து, சிலுவையண்டை வந்து நின்று, நம்மை பரிசுத்தமாக்கிக்கொண்டு ஜெபித்தால், நம் தேசத்தில் எழுப்புதலைக் கொண்டுவரமுடியும்.  

ஜெபம்: தேவனே,  எனது தேசத்தின் எழுப்புதலுக்காக அநேக நாட்களாய் நான் ஜெபித்தும் இன்னும் எழுப்புதல் வரவில்லை. என் பாவம் இதற்குத் தடையாக இருக்கிறது என இன்று உணர்த்தினீர். என்னை மன்னியும். என் பாவத்தைக் களைந்து என்னைப் பரிசுத்தமாக்கி ஜெபத்துக்குப் பதில் தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page