top of page

புதன், ஜூலை 30 || கர்த்தரின் வேதம் உங்களுக்கு மனமகிழ்ச்சியா?

  • Jul 30, 2025
  • 1 min read


நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன். - சங்கீதம் 119: 47 


நாம் எதில் பிரியப்படுகிறோமோ அதை நாம் கட்டாயமாகச் செய்வதில்லை. விருப்பத்துடன் செய்ய விரைகிறோம்.  அவற்றைக்குறித்து நாம் நினைக்கும்போதே நமக்குள்ளாக ஒரு சந்தோஷம் உண்டாகிறது. இதைத்தான் முதலாம் சங்கீதத்தில் சங்கீதக்காரன் பிரியம் எனக் குறிப்பிடுகிறார். கர்த்தருடைய வார்த்தையை நினைக்கும்போதே அவருக்குள ஒரு சந்தோஷம்! ஜான் டீவ்ரீஸ் என்பவர், என் மகள் எனது பிறந்த நாளன்று ஒரு வித்தியாசமான பரிசைக் கொடுத்தாள். ஒரு பெரிய உறைக்குள் பன்னிரண்டு குட்டி குட்டி அட்டைகளை அவள் வைத்திருந்தாள். ஒவ்வொன்றிலும் அழகான ஒரு படத்தை வரைந்து ஒரு வசனத்தை எழுதியிருந்தாள். என்னை நோக்கி, அப்பா, ஒரு மாதத்திற்கு ஒன்று என்று இந்த வருடம் முழுவதிற்குமாக நான் இந்த வசனங்களைப் பரிசாகக் கொடுக்கிறேன். ஒரு மாதத்திற்கு ஒரே ஒரு வசனத்தை நீங்கள் மனப்பாடம் செய்தால் போதும். அதைக்குறித்து தியானித்து மகிழ்ந்தால் போதும். முயற்சித்துப் பாருங்கேளேன். இதைவிட சிறந்த பரிசை என்னால் கொடுக்கமுடியாது என்றாள். அந்த வசனங்களைப் படித்து தியானித்தபோதெல்லாம் எனக்குள்ளாக அதிகமான சநதோஷம் பெருக்கெடுப்பதை அந்த ஆண்டு முழுவதும் நான் உணர்ந்தேன் என்று எழுதுகிறார். 


அன்பானவர்களே, நாம் ஆண்டவருடைய வார்த்தையில் இப்படி மனமகிழ்கிறோமா? அது நம்முடைய உள்ளத்தை நிறைத்திருக்கிறதா? அதை நாம் அனுதினமும் தியானிக்கிறோமா? இல்லையென்றால் ஒரு ஒப்பற்ற சந்தோஷத்தை நாம் இழந்துவிட்டோம் என்றுதான் அர்த்தம். தேவ வார்த்தை தெளிதேனிலும் இனிமையானது. முத்துககளைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றது. பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நலமானது. அது நமக்கு உலகம் தரக்கூடாத சமாதானத்தையும் ஆறுதலையும் தருகிறது. அதில் நாம் இரவும் பகலும் பிரியமாயிருப்போம். அதன் இனிமையில் திளைத்து மகிழ்ந்திருப்போம். 

ஜெபம்: பிதாவே, உமது வார்த்தையைக் காட்டிலும் உலகப் பொருட்களின்மீது அதிக பிரியப்படுகிறேன். என்னை மன்னியும். அழிவற்ற மனமகிழ்ச்சியைத் தர வார்த்தையால் மட்டுமே கூடும் என்று உணர்ந்துகொண்டேன். உமது வாக்குத்தத்தங்களை வாசித்து உரிமையாக்கி மகிழ கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page