top of page

புதன், ஆகஸ்ட் 20 || சுத்த இருதயம், கண்ணீர் நிறைந்த கண்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 20, 2025
  • 1 min read

வாசிக்க: யோவேல் 1: 13-15


(கர்த்தர்) ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்...  - ஏசாயா 59: 16


நமது தேசம், சமுதாயம் மற்றும் சபைகளில் நாம் எழுப்புதலைக் காணவேண்டுமென்றால், நமக்கு சுத்தமான கைகளும், தூய்மையான இருதயமும் இருக்கவேண்டும். அதற்கு நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு, நமது பொல்லாத வழிகளைவிட்டு திரும்பவேண்டும். கிறிஸ்துவினிடத்தில் நம்மை முழுமையாக ஒப்படைத்துவிடவேண்டும். அப்போதுதான், நாம் நமது தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி அவரது சமுகத்தில் மற்றவர்களுக்காக மன்றாடமுடியும். இன்றைக்கு எழுப்புதலைக் கொண்டுவர கர்த்தருக்குத் தேவை, சமுதாயத்தால் மதிக்கப்படுபவர்களோ, ஒழுங்காக சபைக்கு செல்லும் மக்களோ, தாராளமாக கொடுக்கும் மக்களோ அல்ல. நகரங்களிலும் கிராமங்களிலும் மலிந்துகிடக்கும் பாவத்தையும் அருவருப்புகளையும் கண்டு, அதினிமித்தம் உடைந்துபோன இருதயமும், தமது சமுகத்தில் விண்ணப்பமிட்டு அழுது சிவந்துபோன கண்களையும் உடைய மக்களே என்று ஓவன் மர்ஃபி என்பவர் எழுதுகிறார்.


அன்பானவர்களே, இப்படி போராடி ஜெபிக்கும் மக்களே இன்றைய உலகத்திற்குத் தேவை. அப்படிப்பட்டவர்களாக நாமிருக்க நமக்கு விருப்பமா? இருப்பதிலேயே மிகவும் கடினமான ஊழியம் மன்றாட்டு ஜெபமே! தெய்வபயமற்ற உலகில், அநேகர் ஜெபத்தை சற்றும் பொருட்படுத்தாத நிலையில், வெகுசிலராக நாம் ஒருமனதோடு கூடிவந்து, நம் பெலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி கண்ணீருடன் மன்றாடி இடைவிடாமல் தேவசமுகத்தில் ஜெபிப்போமானால், தேசத்தைப் பரிசுத்தப்படுத்தும் ஆவியானவரது அக்கினி நிச்சயம் ஊற்றப்பட்டு பெரிய எழுப்புதல் உண்டாகும் என்று மர்ஃபி எழுதுகிறார். இந்த சவாலை நாம் இன்று ஏற்றுக்கொள்வோமா? இன்று நாம் அப்படி ஜெபிக்க முடிவெடுத்தால், ஆவியானவர் நமக்கு வேண்டிய கிருபை, பெலத்தைத் தருவார். ஏனெனில் நாம் அவருக்காகவே இதைச் செய்கிறோம். பேர் புகழுக்காக அல்ல.

ஜெபம்: தேவனே, என்னில் சுத்த இருதயத்தை சிருஷ்டியும். நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான ஆவியைத் தாரும். நான் ஒருவன் மட்டுமே ஜெபிக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் உம் சமுகத்தில் விடாப்பிடியாக ஜெபிக்க கிருபை தந்து, என் தேசத்தில் பெரும் எழுப்புதலைக் கொண்டுவாரும்.  ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page