திங்கள், ஜூலை 28 || எழுப்புதலுக்குக் கர்த்தர் பயன்படுத்தவேண்டுமா?
வாசிக்க: ஏசாயா 6:1-8
யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாய்ப் போவான்? - ஏசாயா 6:8
இராக்காலம் வருகிறது என்று எழுதப்பட்ட ஒரு கைக்கடிகாரத்தை சாமுவேல் ஜான்சன் எப்போதும் அணிந்துகொண்டிருப்பார். இது யோவான் 9:4ல், பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது என்று இயேசு கூறியதை ஞாபகப்படுத்துகிறது. இவ்வுலக வாழ்க்கை மிகவும் குறுகினது என்பது உண்மை. எனவே, நமக்கு ஆண்டவர் நியமித்த வேலையை முழுவதுமாகச் செய்துமுடிக்க நாம் சுறுசுறுப்பாகச் செயலாற்றவேண்டும். மரிக்கும் தருவாயில் இருந்த ஒரு கிறிஸ்தவரின் அருகில் பில்லி பெரே என்ற ஊழியர் அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் அந்த மனிதர், இன்று எனக்குப் பெலன் கொடுக்கப்பட்டால் நான் ஆண்டவரை உரத்த குரலில் மகிமைப்படுத்துவேன் என்றார். அதற்கு பில்லி, இப்போது இப்படி நீங்கள் சொல்வதைக் காட்டிலும், உங்களுக்குப் பெலனிருந்த காலத்தில் நீங்கள் அதைச் செய்திருக்கவேண்டுமல்லவா என்றார். ஆம்! கடந்த காலங்களில் எத்தனையோ முறை நமக்கு ஆத்தும ஆதாயம் செய்யக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்புகளை நாம் தவறவிட்டிருக்கிறோம். அதற்காக நாம் வருந்தவும் செய்கிறோம். கர்த்தர் நம்மைப் பயன்படுத்தத் தயாராக இருந்தபோதும் நாம்தான் அவரை அனுமதிக்கவில்லை. இனியாவது நாம் அதிகமாக வேதம் வாசித்து அதிகமாக ஜெபித்து, அதிகமாக ஊழியம் செய்வோம்.
அன்பானவர்களே, இப்படிப்பட்ட தரிசனத்தை நமக்கு ஆவியானவர் தரும்படி ஜெபிப்போம். அத்துடன், நம்மிடமுள்ள பெருமையைக் களைந்து, தடையாயிருக்கிற வேறெந்தக் காரியத்தையும் விட்டுவிட அவரது கிருபையைக் கேட்போம். தேசத்தில் கதவுகள் திறந்திருக்கும்போதே, நமக்கும் சரீரத்தில் பெலனிருக்கும்போதே கர்த்தரோடு ஒத்துழைத்து, அவர் திட்டத்தை நிறைவேற்றும் கருவிகளாவோம். எழுப்புதலைக் கொண்டுவருவோம்.ஜெபம்: தேவனே, ஆண்டவர் இயேசுவின் வருகை மிக சமீபமாயிருக்கிறது. யாரும் கிரியை செய்யமுடியாத காலங்கள் வருமுன்பதாக, முயன்று உழைப்போம். கர்த்தருடன் ஒத்துழைப்போம். எழுப்புதல் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம். அவரின் திட்டத்தை நிறைவேற்றுவோம். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments