top of page

செவ்வாய், ஜூலை 22 || உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதீர்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 22, 2025
  • 1 min read


அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். - நீதிமொழிகள் 29: 1


யாத்திராகமம் 7-11ம் அதிகாரம்வரை குறைந்தபட்சம் 12 முறையாவது பார்வோனது இருதயம் கடினப்பட்டது என்று போடப்பட்டிருப்பதை நாம் வாசிக்கலாம்.


முதலில் மோசேயின் கோல் பாம்பானது;

அடுத்து ஆற்றின் நீரெல்லாம் இரத்தமாக மாறினது;

பின்பு, தவளைகளால் வாதை, பின்னர் பேன்களினால் வாதை, வண்டுகளினால் வாதை என்று அடையாளங்கள் தொடர்ந்தும் பார்வோனின் இருதயம் இன்னமும் கடினப்பட்டதே தவிர குணப்படவில்லை. எனவே, தொடர்ந்து கால்நடைகள் அனைத்தும் மரித்துப்போயின; எகிப்தின் ஜனங்களும் மந்திரவாதிகளும் எரிபந்தமான கொப்புளங்களால் பாதிக்கப்பட்டனர். பின்னர் கொள்ளைநோய் வந்தது; கல்மழையோடே கலந்த அக்கினி அழித்தது. அதைத் தொடர்ந்தது வெட்டுக்கிளிகளால் வந்த வாதை.


ஆயினும், கடின இருதயம்கொண்ட பார்வோன் இஸ்ரவேலரை விட மறுத்ததால், கர்த்தர் எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரிக்கப்போவதாக கடுமையாக அவனை எச்சரித்தார். அப்போதும் அவன் மாறவில்லை. எனவே, சங்காரத்தூதன் வந்த அந்த இரவில்தானே அவனும் அவனது குடிமக்கள் அனைவரும் தங்கள் தலைச்சன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தார்கள். மனக்கடினத்தால் வந்த விளைவு எத்தனை பரிதாபம்! 


அன்பானவர்களே, லேவியராகமம் 26:21ல், நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறுவதை வாசிக்கிறோம். எனவே, கர்த்தரது எச்சரிப்பை நம் ஒருபோதும் அசட்டைசெய்யாமல் ஜாக்கிரதையாயிருப்போம்.

ஜெபம்: பரமனே, பல அற்புதங்கள் அடையாளங்களைக் கண்டபின்னும் பார்வோன் மனந்திரும்பவில்லை. நானும் பலமுறை என் மனதைக் கடினப்படுத்தியிருக்கிறேன். கிருபையாக மன்னியும். இனி நான் ஒருபோதும் உம்மை எதிர்த்து நில்லாமல் கீழ்ப்படிந்திருக்க உதவி செய்யும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page