தெளிதேன் துளிகள் வாசிக்க : ஆதியாகமம் 32: 22-30 ... நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன். - ஆதியாகமம் 32: 26 ஏசா தன்னைச் சந்திக்க நானூறு பேரோடு புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறான் என்ற செய்தி யாக்கோபை பயமுறுத்தியது. தன்னைப் பழிவாங்கவே அவன் வருகிறான், தன் வாழ்வு முடிவுறப் போகிறது, தப்ப வழியேயில்லை என்று நினைத்து கலங்கிய யாக்கோபு கர்த்தரிடத்தில் முறையிட்டுக் கொண்டிருந்தான். அன்று இரவில் அவன் தனித்திருந்த வேளையில் ஒரு புருஷன் அவனோடு இரவுமுழுவதும் போராடினார். அவர் வேற