top of page

The Commentary On The Book of Psalms – Sangeetha Puthgathin Vilakkavurai (சங்கீதப் புத்தகத்தின் விளக்கவுரை) | S. John Jacob (ELS-Publish – 373)

No Pages: 1067

Size: 24.8 x 18.8 x 5.2 cm

Type: Hardbound

தேவ ஊழியர் S.ஜான் ஜேக்கப் அவர்கள் எழுதிய சங்கீதப் புத்தகத்தின் விளக்கவுரை என்ற இம்மாபெரும் படைப்பிற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தி கர்த்தரைத் துதிக்கிறோம்.

பல வருடங்களாக ஊழியம் செய்துவரும் மூத்த தேவ ஊழியர் ஜான் ஜேக்கப் அவர்கள் 16 ஆண்டுகளுக்கு மேலாக வேதத்தை ஆராய்ச்சி செய்து ஆண்டவரின் ஏவுதலின்படி தியானம் செய்து சங்கீதப் புத்தகத்தின் அதிகாரங்களிலுள்ள ஒவ்வொரு வசனத்தையும் ஆராய்ந்து அதில் உள்ள ஆழங்களை அறிந்து மிக நேர்த்தியாக இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஒவ்வொரு சங்கீதத்தையும் தாவீது தன் வாழ்க்கையில் நடந்த அனைத்து

சம்பவங்களையும் அதாவது அவருடைய உயர்வு, எதிரிகளால் வந்த ஆபத்து, தான் பாவம் செய்த நேரத்தில் ஏற்பட்டதுக்கம், அவர் கதறி அழுத வேண்டுதல்கள், தேவனிடம் பெற்றுக் கொண்ட இரக்கங்களையும். சத்துருக்களால் வந்த துன்பங்களில் கர்த்தர் உடன் இருந்த நேரங்கள் போன்ற பலநிலைகளில் தன் வாழ்க்கை அனுபவத்தை தாவீது பாடியுள்ளதாக இப்புத்தகத்தில் ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார்.

மேலும், தேவையான இடங்களில் கருத்துக்களை விளக்கிச் சொல்வதற்கு உவமையாக தன்னுடைய ஊழியப் பாதையில் நடந்த சம்பவங்களோடு, முதிர்ந்த ஊழியர்களோடு அவர் பயணித்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும் கூறியுள்ளார்.

தனி நபர்களின் வேத அறிவு வளர்ச்சிக்கும், குடும்பமாக கூடி வாசித்து மகிழவும், ஊழியர்களுக்கும், திருச்சபைகளுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். ஒருமுறை வாசித்து வைத்துவிடும் பிற புத்தகங்களைப் போலன்றி, வாழ்நாள் முழுவதும் பரிசுத்த வேதாகமத் தோடு வைத்து பயன்படுத்தும் ஓர் அரிய பொக்கிஷமாகும். இதை ஜெபத்தோடும், கருத்தோடும் வாசிக்கும் பொழுது வேதப் புத்தகத்தின் ஆழங்களை தெளிவாக அறிந்துக் கொள்ளமுடியும். தேவ ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக.

The Commentary On The Book of Psalms – சங்கீதப் புத்தகத்தின் விளக்கவுரை

SKU: ELS373
₹870.00 Regular Price
₹739.00Sale Price
Excluding VAT
Quantity
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page